Villupuram

News December 18, 2024

பாமக பொதுக்குழு கூட்டம் – ராமதாஸ் அறிவிப்பு

image

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (டிச.18) வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 2024க்கு விடை கொடுப்போம். 2025ஐ வரவேற்போம். டிசம்பர் 28ஆம் தேதி புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெறும். இப்பொதுக் குழு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலை ஏற்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

News December 18, 2024

விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் – இபிஎஸ் அறிவிப்பு

image

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி அதிமுக சார்பில் வரும் சனிக்கிழமை காலை 10 மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (டிச.18) அறிவித்துள்ளார்.

News December 18, 2024

விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முகாமில், 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன. இதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் பங்கேற்கலாம். ஷேர் பண்ணுங்க

News December 18, 2024

லாரி மீது பேருந்து மோதி 11 பக்தர்கள் படுகாயம்

image

46 பேருடன் கர்நாடகாவிலிருந்து, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு  தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. திண்டிவனம் – சென்னை சாலையில் உள்ள பாதிரி கிராமம் அருகே இன்று அதிகாலை பேருந்து வந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது பலமாக மோதியது. இதில் நிலை தடுமாறிய லாரி, சாலையோர மரத்தின் மீது மோதி நின்றது. இதில் லாரி டிரைவர் பாண்டியராஜன் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News December 18, 2024

சபரி மலை சென்ற பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது

image

திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை அருகே ஐயப்ப பக்தர்கள் பயணித்த வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியில் இருந்து சபரிமலை நோக்கிச் சென்ற 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் பேருந்து மூலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

News December 17, 2024

யானை தந்தம் கடத்தல்: உதவி ஆய்வாளர் கைது

image

விழுப்புரத்தில் யானை தந்ததால் செய்யப்பட்ட யானை பொம்மைகளை விற்பனை செய்ய முயன்ற வழக்கில் திருச்சி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் மணிவண்னனை வனத்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். விழுப்புரத்திலுள்ள தனியார் விடுதியில் யானை தந்ததால் செய்யப்பட்ட யானை பொம்மைகள் நான்கினை 12 பேர் விற்பனை செய்ய முயன்றபோது விழுப்புரம் வனத்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

News December 17, 2024

இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (17.12.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 17, 2024

விழுப்புரம் மாவட்ட தொழில் மையத்தில் கடனுதவி முகாம்

image

விழுப்புரம் மாவட்ட குறுஞ்சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் தொழில் மையம் சார்பில் பெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் தம் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க சுய வேலைவாய்ப்பு திட்டம் மானியத்துடன் கூடிய கடனுதவி விழிப்புணர்வு மற்றும் விண்ணப்ப முகாம் நடந்தது. இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News December 17, 2024

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற விழுப்புரம் மாணவி

image

மலேசியாவில் நடைபெற்ற 10வது ஆசிய பசிபிக் காது கேளாதோர் விளையாட்டுப் போட்டிகளில், தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தையும், வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவி சுபஸ்ரீ இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

News December 17, 2024

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ற இருவர் கைது

image

விழுப்புரன் அருகேயுள்ள காவனிப்பாக்கம் கிராமத்தில் இன்று இருசக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து சென்ற வழுதரெட்டியை சேர்ந்த ராம்ஜி, நவீன் ஆகிய இருவரையும் விழுப்புரம் தாலுக்கா காவல்நிலைய போலீசார் கைது செய்து 1 கிலோ 900 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!