Villupuram

News December 7, 2024

ஆசிய பசிபிக் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற மாணவி

image

மலேசியாவில் நடைபெற்ற 10ஆவது ஆசிய பசிபிக் காது கேளாதோர் விளையாட்டுப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் விழுப்புரம் MRIC பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சுபஸ்ரீ வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். முந்தைய நாளில் நடந்த 400 மீட்டர் போட்டியில் தங்கம் வென்றார். முதல் நாளில் தங்கம், 2ஆவது நாளில் வெள்ளி என அடுத்தடுத்து பதக்கங்களை குவித்த அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஷேர் பண்ணுங்க

News December 7, 2024

விழுப்புரம் ஊராட்சிகளில் ரூ.2,000 வழங்கிய எம்.எல்.ஏ.

image

கோலியனூர் ஒன்றியத்தில் உள்ள தளவானூர், காவணிப்பாக்கம், திருப்பாச்சனூர், சித்தாத்தூர் திருக்கை ஆகிய ஊராட்சிகள், ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண தொகை ரூ.2,000 மற்றும் பாய், அரிசி, சர்க்கரை, பருப்பு ஆகிய அத்தியாவசிய பொருட்களை நேற்று விழுப்புரம் எம்.எல்.ஏ. லட்சுமணன் வழங்கினார். மேலும், திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

News December 7, 2024

பொன்முடி சேறு வீசிய விவகாரத்தில் இருவர் மீது வழக்கு

image

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட இருவேல்பட்டு கிராமத்தை, அண்மையில் பார்வையிட சென்ற அமைச்சர் மீது சேறு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை சற்றும் எதிர்பாராத பொன்முடி அதிர்ச்சி கவலையுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் ராமர் மற்றும் விஜயராணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. விஜயராணி பாஜக நிர்வாகியாக உள்ளார்.

News December 7, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (06.12.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 6, 2024

பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பியவர் விபத்தில் சிக்கினார்

image

அரகண்டநல்லூர் அடுத்த மணம்பூண்டியில் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை இன்று காலை கத்தியால் குத்திவிட்டு காரில் தப்பி சென்ற நபர் மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கினார். மேலும், கத்தியால் குத்திய நபரை காரில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அரங்கண்டநல்லூர் காவல் துறையினர், கொலை சம்மந்தமாக  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 6, 2024

காதுக்கேளாத மனைவி விளையாட்டு போட்டியில் தங்கம்

image

விழுப்புரம் மாணவி இன்று மலேசியாவில் நடைபெற்ற 10ஆவது ஆசிய பசிபிக் காது கேளாதோர் விளையாட்டுப் போட்டியில் 400 மீ ஓட்டப்பந்தயத்தில் விழுப்புரம் பிமநாயக்கன் தோப்பு நகராட்சி மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி சுபஸ்ரீ தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மாணவி சுபஸ்ரீ ஏற்கனவே பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 6, 2024

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் பொன்முடி 

image

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தை ஒட்டி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் வனத்துறை அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் லட்சுமணன் எம்.எல்., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட திமுக பொருளாளர் ஜனகராஜ், நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி, நகர செயலாளர் சக்கரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News December 6, 2024

ரூ.2,000 பெற ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகம்

image

ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். நேற்று முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. டோக்கன்களில் கொடுக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் நாள் அன்று ரேஷன் கடைகளில் ரூ.2000 தொகை பெற்றுக் கொள்ளலாம்.

News December 6, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், மாணவர்கள் நலன் கருதி விழுப்புரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.6) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் (டிச.9) முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால், இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.

News December 6, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (05.12.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!