Villupuram

News April 3, 2025

விழுப்புரம் சுற்றுவட்டாரங்களில் மழை

image

விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. மரக்காணம், செஞ்சி, தீவனூர், நெடி, மோழியனூர், வண்டிமேடு, வி.மருதூர், விரட்டிக்குப்பம், சாலமேடு, ராஜாம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

News April 2, 2025

பட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உடையாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவரிடம் பட்டா மாற்ற ரூ.5,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார்.தனியார் விடுதியில் வைத்து லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.மேலும் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு இடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 2, 2025

சனி தோஷம் நீக்கும் கல்பட்டு சனி பகவான்

image

சனி தோஷத்தை நீக்கும் புகழ் பெற்ற கோயிலாக உள்ளது விழுப்புரம் மாவட்டம் கல்பட்டில் உள்ள சனீஸ்வரர் கோயில். இங்கு சனி பகவான் 21 அடி உயரத்தில் வலது காலை காகத்தின் மீது வைத்து காட்சி தருகிறார். ஏழரை சனி, கண்ட சனி, வக்ர சனி, விரய சனி என்று எந்த சனி தோஷத்தால் பாதிப்பு இருந்தாலும் ஒருமுறை இக்கோவிலில் வந்து பிராத்தனை செய்தால் போதும். அவை யாவும் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News April 2, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் பி.டி.ஓ.க்கள் பணியிட மாற்றம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 18பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, ரவி, வெங்கடசுப்ரமணியன், ராஜவேல், சிவநேசன், சையது முகம்மது, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட 18 பி.டி.ஓ.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பிறப்பித்துள்ளார்.

News April 2, 2025

விழுப்புரம்: தொழிற்கூடங்களை வாடகைக்கு பெறலாம்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்கூடங்களை குத்தகை மற்றும் வாடகை முறையில் பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விருப்பமுள்ளவர்கள் வரும் 4ம் தேதி ஈங்கூர் தொழிற்பேட்டையை பார்வையிட்டு விண்ணப்பிலாம் என்று கூறப்பட்டுள்ளது.

News April 2, 2025

CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

image

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி. ஷேர் பண்ணுங்க

News April 2, 2025

லாரி ஓட்டுநர்கள் மீது அரிவாள் வெட்டு

image

விழுப்புரம் – நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் நேற்று (ஏப்ரல் 1) ஒரே இரவில் 3 இடங்களில் அரிவாள் வெட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. லாரிகளை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த லாரி ஓட்டுநர்களை, மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு பணம் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றது. பைக்கில் வரும் அந்த மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 2, 2025

ஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்: இளைஞர் கைது

image

மதுரையில் இருந்து சென்னைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை பாடி பகுதியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் அண்மையில் பயணம் செய்தார். ரயில் விழுப்புரம் அருகே வந்தபோது, அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் அவருடன் பயணித்த அருள்பாண்டி வெயது (24) என்பவர் குடிபோதையில் சில்மிஷம் செய்துள்ளார். ரயில் விழுப்பரம் ரயில் நிலையதிற்கு வந்ததும், அந்த நபரை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

News April 2, 2025

மேல்மலையனூர்: கிருத்திகை முன்னிட்டு அங்காளம்மன் வீதியுலா

image

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் இன்று(ஏப்.01) இரவு பங்குனி கிருத்திகையை முன்னிட்டு வீதியுலா உற்சவம் நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேகம் செய்து புத்தாடை உடுத்தி வண்ண மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

News April 2, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (01.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!