India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் ஃபெஞ்சல் புயலால் பாதித்த விவரங்கள் மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மொத்த கிராமங்களின் எண்ணிக்கை 924.பாக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 528. மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 622128 என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 412,355 என்று விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை திருவெண்ணைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிறுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஓமந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நாரவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கந்தாடு அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி, வண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கீழ்சித்தாமூர் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (10.12.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு மனித உரிமைகள் தின உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று (10.12.2024) ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி உட்பட பலர் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி தி.மலை – விழுப்புரம் இடையே டிசம்பர் 12,13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து இரவு 9:15 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 10:45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறு மார்க்கம் அதிகாலை 3:30 மணிக்கு புறப்பட்டு காலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இது வெங்கடேசபுரம், மாம்பழபட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக செல்லும்.
சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவடையாததால், திருவெண்ணைநல்லுார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிறுமதுரை ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி, மரக்காணம் ஒன்றியம் ஓமந்துார் ஒன்றிய தொடக்கப்பள்ளி, நாரவாக்கம் ஒன்றிய தொடக்கப்பள்ளி, கந்தாடு அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி, வண்டிப்பாளையம் ஒன்றிய தொடக்கப்பள்ளி, கீழ்சித்தாமூர் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி ஆகிய 7 பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்கிறது.
மயிலம் அருகே உள்ள சின்ன வளவனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ். விசிக மயிலம் மத்திய ஒன்றிய துணை செயலாளராக இருந்து வந்த இவர், கருத்து வேறுபாடு காரணமாக சுமார் 3 ஆண்டுகளாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மனமுடைந்து காணப்பட்ட மகேஷ் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (09.12.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மழையால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் 10 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. வெள்ளத்தில் புத்தகங்கள் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், இன்று அவை பள்ளியிலேயே வழங்கப்படும். மாவட்டத்தில் ஒரு மேல்நிலைப்பள்ளி உட்பட 7 அரசுப் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை. மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள 7 பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
Sorry, no posts matched your criteria.