Villupuram

News December 12, 2024

தொடர் மழையால் சிறப்பு முகாம் ரத்து

image

விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல், வெள்ளத்தினால் ரேஷன், ஆதார், வாக்காளர் அட்டை, கல்வி சான்றிதழ்கள் இழந்தவர்கள் திரும்ப பெரும் வகையில் வரும் டிசம்பர் 13,14ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக சிறப்பு முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 12, 2024

விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

image

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை(டிச.13) அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ஆட்சியர் சி.பழனி விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். SHARE பண்ணுங்க மக்களே

News December 12, 2024

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

தி.மலை தீபத்தையொட்டி, திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 12.12.2024 முதல் 15.12.2024 வரை விழுப்புரம், கடலூர் புதுச்சேரி, திண்டிவனம், வழித்தடங்களிலிருந்து கிருஷ்ணகிரி பெங்களூர் மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் செஞ்சி, சத்தியமங்கலம், கீழ்பென்னாத்தூர், கண்டாச்சிபுரம், வேட்டவலம் வழியாக தி.மலைக்கு செல்ல வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News December 12, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 14ஆம் தேதி ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் தனி தாசில்தார் வட்ட வழங்கல் அலுவலர்களால் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இதில் முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், மொபைல் எண் பதிவு மாற்றம் செய்வதற்கான தனியாக கோரிக்கை மனு வழங்கலாம் கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

News December 12, 2024

ONGC சார்பில் நிவாரணம்

image

விழுப்புரம் 5ஆவது வார்டில் உள்ள நிவாரண முகாம்களில், புயல் மற்றும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு, ONGC சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அரிசி, ரவை, சர்க்கரை, எண்ணெய், போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை, ONGC – Cauvery Basin அதிகாரி புவனேஷ் மற்றும் விழுப்புரம் 5ஆவது வார்டு கவுன்சிலர் நந்தா நெடுஞ்செழியன் ஆகியோர் வழங்கினர்.

News December 12, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு

image

விழுப்புரம் மாவட்டத்தின் நேற்றைய மழை அளவு வெளியாகியுள்ளது. விழுப்புரத்தில் 60 மி.மீ, கோலியனூரில் 37 மி.மீ, வளவனூரில் 41 மி.மீ, கெடாரில் 44 மி.மீ, முண்டியம்பாக்கத்தில் 39 மி.மீ, நேமூரில் 45 மி.மீ, கஞ்சனூரில் 41மி.மீ, சூரப்பட்டு பகுதியில்  38 மி.மீ, வானூரில்  27 மி.மீ, திண்டிவனத்தில் 87மி.மீ, மரக்காணத்தில் 37 மி.மீ, செஞ்சியில் 48 மி.மீ, முகையூரில் 31 மி.மீ என மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. 

News December 12, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை தொடரும்

image

வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்கள், சாலைகளில் மழைநீர் தேங்கும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். நேற்றுபோல் இன்றும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

News December 12, 2024

திண்டிவனம் சிப்காட் பகுதியில் டாபர் நிறுவனம்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிப்காட் உணவுப்பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் டாபர் நிறுவனம் புதிய உற்பத்தி ஆலை அமைக்க உள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாபர் நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது. இதன்படி, 1.36 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது. இதனால் சுமார் 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

News December 12, 2024

விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

தொடர் கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 11, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!