Villupuram

News December 14, 2024

கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை

image

தொடர் கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (டிச.14) விடுமுறை அளிக்கப்பட்டதே தவிர, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை.

News December 14, 2024

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

image

தொடர் கனமழை காரணமாக. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.14) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், 2 நாட்கள் விடுமுறை ஆகும்.

News December 13, 2024

விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் நிலையில், மழையின் காரணமாக நாளை (டிச.14) பள்ளிகளுக்கு மாட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். மேலும், எந்த வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News December 13, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (13.12.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 13, 2024

விழுப்புரத்தில் 5 பேருக்கு சாகும் வரை சிறை

image

விழுப்புரத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட தீபன் சக்ரவர்த்தி, வினோத்குமார், பாபு, பிரதீப் ராஜ், ரஜினி சுமன் ஆகிய ஐந்து பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

News December 13, 2024

செஞ்சி கோட்டையில் ஏற்றப்பட்ட மகா தீபம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக செஞ்சி ராஜகிரி, இராணி கோட்டை உள்ளது. இன்று திருக்கார்த்திகை விழாவை  முன்னிட்டு 800 அடி உயரம் கொண்ட ராஜகிரி கோட்டை, ராணி கோட்டை, சிவன் கோவில் உள்ளிட்ட நான்கு இடங்களில் மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இன்று ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து மூன்று நாளைக்கும் ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

News December 13, 2024

விழுப்புரம் மாவட்டத்தின் மழைப்பொழிவு விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தின் நேற்றைய மழையளவு விபரம் வெளியிடப்பட்டுளள்து. விழுப்புரத்தில் 3 மி.மீ, திண்டிவனத்தில் 12 மி.மீ, மரக்காணத்தில் 34  மி.மீ, செஞ்சியில் 4  மி.மீ, வல்லம் பகுதியில் 7 மி.மீ, அவலூர்பேட்டையில் 86  மி.மீ, மனம்பூண்டியில் 32  மி.மீ, திருவெண்ணைநல்லூரில் 66  மி.மீ, வளத்தியில் 74  மி.மீ. என சராசரியாக 56.44  மி.மீ மழை பதிவாகியுள்ளது.

News December 13, 2024

விழுப்புரத்தில் கனமழை: மக்கள் அவதி

image

விழுப்புரம், திண்டிவனம், பிரம்மதேசம், செஞ்சி, செம்மேடு, மரக்காணம், விக்கிரவாண்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்தது. வியாழக்கிழமை காலை 934.60 மி.மீ., மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திண்டிவனத்தில் 84.40 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, வீரங்குளம் ஏரி உடைந்து சுமார் 500 வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்தனர். உங்கள் பகுதியில்?

News December 13, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்த ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 12, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, செஞ்சி கோட்டகுப்பம், திண்டிவனம், உட்கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று (12.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு  அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!