India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த அநீதியை கண்டித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு நாளை (டிச.30) காலை 10 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதிமுக மாவட்ட செயலாளர் சி.வி. சண்முகம் எம்.பி. தலைமையில் விழுப்புரம் மாவட்ட நகர, பேரூராட்சி, கிளை, வார்டு நிர்வாகிகள் மற்றும் அதிமுக கட்சித் தொண்டர்கள் கலந்துக் கொள்கின்றனர்.
விழுப்புரத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி கடந்த 24ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று மாலை இவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள்அவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். மணி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது 30 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் தொழில் திட்டங்களுக்கு வங்கிகள் நிதிக் கடன்களை வழங்க முன்வர வேண்டும் என்று ஆட்சியர் சி.பழனி வலியுறுத்தினார். விழுப்புரம், வல்லம், மயிலம் பகுதிகளில் சிறு, குறு விவசாயிகளால் அவுரி செடி பயிரிடப்படுகிறது. அவை, அலங்காரம் மற்றும் மருத்துவத் தொழில்களில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. விவசாயிகளை ஆதரிப்பதற்காக , ரூ.38.66 லட்சத்தை நபார்டு வங்கி அனுமதித்துள்ளது.
தி.வெ.நல்லூர் அருகே உள்ள கரடிப்பாக்கம், பெரியசெவலை கிராமங்களில் மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி வரும் டிச.29, 30 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என வன்னியர் சங்கம் அறிவித்திருந்தது. நேற்று வட்டாட்சியர் நடத்திய பேச்சு வார்த்தையில், டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தென் கேரளக் கடலோரப் பகுதி மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. நேற்று (டிச.28) காலை விழுப்புரம் புதிய, பழைய பேருந்து பகுதிகள், திருச்சி, சென்னை நெடுஞ்சாலைகள், செஞ்சி, திருக்கோவிலூா் சாலைகள், கிழக்கு புதுச்சேரி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக, (மீ.மீ.,) வளத்தி-62, அவலூா்பேட்டை-50, வல்லம்-14.40 மழை பதிவானது.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற இடத்தில் இன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் கோட்டக்குப்பம் அருகே ராட்சத அலையில் பைபர் படகு சிக்கி கவிழ்ந்ததில் 3 மீனவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர். படகின் இன்ஜின் திடீரென நின்றதாலும் படகை இயக்க முடியாமல் மீனவர்கள் திணறினர். கரையில் இருந்தவர்கள் கயிற்றின் உதவி மூலம் 3 பேரையும் காப்பாற்றினர். இதனால், அந்த பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை ஒதுங்கிய படகை கயிறு மூலம் இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.
கூட்டுறவுத் துறை சார்பில், பொங்கல் சிறப்பு தொகுப்புகள் விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதன்படி, விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில், நேற்று பொங்கல் தொகுப்பு விற்பனை தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொங்குபுகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
பன்னீர் கரும்புகள் அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில், ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் 30% கரும்புகள் சேதமாகி இழப்பு ஏற்பட்டதாக விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, 1 கரும்புக்கு ரூ.23 – ரூ.25 வரை உயர்த்தி வழங்க வேண்டும், தரகர்களின்றி அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அப்போது தான், விவசாயிகளுக்கான இழப்பீடை ஓரளவிற்கு ஈடுகட்ட முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.