India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரன் அருகேயுள்ள காவனிப்பாக்கம் கிராமத்தில் இன்று இருசக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து சென்ற வழுதரெட்டியை சேர்ந்த ராம்ஜி, நவீன் ஆகிய இருவரையும் விழுப்புரம் தாலுக்கா காவல்நிலைய போலீசார் கைது செய்து 1 கிலோ 900 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட கணபதி நகர், லிங்கம் நகர் நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து 17 நாட்கள் ஆன நிலையில் இன்னமும் நீர் வடியாமல் சுமார் 100 குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கி அடிப்படை வசதிகள் இல்லாமல் குடியிருப்பு வாசிகள் தவித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நிலைமை சீராகவில்லை என்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்திய பின்பும் நடவடிக்கை இல்லை.
விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் அடுத்த பென்னகர், கருங்குழி, சின்னகரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பென்னாகரையில் வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்து இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு 28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று பொன்முடி ஆஜராகி உள்ளார்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நடுக்கடலில் சூறாவளி காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மயிலம் அடுத்துள்ள கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் பெஞ்சல் புயல் வெள்ள நிவாரண தொகை 2,000 ரூபாய் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த 100க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலைக்கு வந்தனர். தகவல் அறிந்து வந்த டி.எஸ்.பி. தலைமையிலான மயிலம் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக 92 பேரை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நகர்புறம் கிராமப்புற சாலைகள் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த இருசக்கர வாகனங்களில் பாதுகாப்பாக செல்வதற்காக வட்டார போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசார் கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை ஹெல்மெட் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் 291 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (16.12.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் வலுப்பெற்று தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மற்றும் டிச.,18ஆம் தேதி மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சொர்ணாவூர் அணைக்கட்டு மதகுகள் கனமழை வெள்ளத்தினால் சேதமடைந்ததையடுத்து, சீரமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.12.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா உட்பட பலர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.