Villupuram

News December 21, 2024

விழுப்புரத்தில் இன்று மின்தடை

image

விழுப்புரம் நகரம், சென்னை மற்றும் திருச்சி நெடுஞ்சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, விராட்டிக்குப்பம், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பிள்ளையார்குப்பம், பொய்யப்பாக்கம், ஆனாங்கூர், கீழ்ப்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன்நகர், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, வி.அகரம், , வழுதரெட்டி, தொடர்ந்தனூர், கோலியனூர். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை

News December 20, 2024

விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு 

image

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை ஒட்டி விருதுநகரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வினாடி வினா போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யும் போட்டி டிசம்பர் 21 (நாளை) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனுவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம்  இன்று மாலைக்குள் வழங்க வேண்டும் என ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

News December 20, 2024

கணவனை கொலை செய்த மனைவி உட்பட 4 பேர் கைது

image

விழுப்புரம், சித்தாமூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 14ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், மணிகண்டனின் மனைவி தமிழரசிக்கும், சங்கர் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதற்கு இடையூறாக இருந்த மணிகண்டனை, மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் சங்கர், தமிழரசி மற்றும் உடந்தையாக இருந்த இருவரை கைது செய்தனர்.

News December 20, 2024

4 இடங்களில் ரயில் மறியல் போராட்டம்: 160 பேர் கைது

image

கண்டமங்கலம், விக்கிரவாண்டி, திண்டிவனம், அரகண்டநல்லூா் ஆகிய 4 இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விசிகவினர் 160 பேரை போலீஸாா் கைது செய்தனா். மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி, அதைக் கண்டித்தும், அவா் பதவி விலக வலியுறுத்தியும் விசிக சாா்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் விழுப்புரம் மாவட்டமே ஸ்தம்பித்தது.

News December 19, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (19.12.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 19, 2024

விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

image

விழுப்புரத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து கணினி உதவியாளர்கள் துாய்மை காவலர்களுக்கு மேம்படுத்தபட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

News December 19, 2024

கை கால்கள் வெட்டப்பட்ட நிலையில் உடல் மீட்பு

image

திருவக்கரை கல்குவாரியில் கிடந்த வாலிபர் உடல், 25 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டது. வானூர் அடுத்த திருவக்கரை கல் குவாரியில், கடந்த 23ஆம் தேதி பாலிதீன் கவரில் உடல் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, குவாரியில் கிடந்த உடலை வெளியே எடுத்தால், அதில் கை, தலை, கால்கள் துண்டிக்கப்பட்டு உடல் மட்டுமே கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 19, 2024

விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்: அதிமுக அறிவிப்பு

image

விவசாயிகளின் பயிர்களுக்கான உரிய நிவாரணத் தொகை​யை​ திமுக அரசு வழங்​க​வில்லை. இதைக் கண்டித்​தும், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்க வலியுறுத்​தி​யும், விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்​பில் டிச.21ஆம் தேதி காலை 10 மணியள​வில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், முன்​னாள் அமைச்சர் சி.வி.சண்​முகம் தலைமை​யில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஷேர் பண்ணுங்க

News December 19, 2024

விழுப்புரத்தில் 114 சாலைகள், 81 சிறுபாலங்கள் சேதம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார், 346 கி.மீ., நீளமுள்ள 114 சாலைகள், 81 சிறுபாலங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றைச் சீரமைக்க ரூ.132.85 கோடி தேவைப்படும் எனவும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

News December 18, 2024

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (டிச.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!