Villupuram

News November 11, 2024

கடலோர பாதுகாப்பு பணியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

இந்திய கடலோர பாதுகாப்பு படையில் சேர விருப்பமுள்ள விழுப்புரம் கடலூர் மாவட்ட மீனவ சமுதாய சேர்ந்த இளைஞர்கள், கடலூர் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி பிளஸ் டூ தேர்வில் 50% மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய நபர்களுக்கு 3 மாத இலவச பயிற்சி வழங்கப்படும் என கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 10, 2024

அரசு பேருந்தும், வேனும் மோதி விபத்து: 15 பேர் காயம்

image

விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு நோக்கி சென்ற அரசு பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 15 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை மக்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 10, 2024

மின் நுகர்வோர் புகார் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண்

image

தமிழ்நாடு மின்சார வாரியம்‌ மக்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, மின்சார வாரியத்தில் ஏதேனும் புகார்கள் இருந்தால், வாட்ஸ்-அப் எண்களில் தெரிவிக்கலாம். இதற்கான மண்டல வாரியாக எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், கடலூர்‌, திருவண்ணாமலை மாவட்டங்களின்‌ புகார்களுக்கு வாட்ஸ்‌ ஆப்‌ எண்: 94458 55768. எனவே மக்கள் தங்களது புகார்களை மேற்கண்ட எண்ணில் வாட்ஸ்-அப் வழியாக தெரிவித்து பயன்பெறலாம்.

News November 10, 2024

விழுப்புரத்தில் நவ.13 முதல் மழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் நவ.13ஆம் தேதி முதல் விழுப்புரம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், விழுப்புரம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 10, 2024

விழுப்புரம்-திருச்சி விரைவு ரயில் பகுதி அளவு ரத்து

image

திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம்-திருச்சி மேமு விரைவு ரயில் நவ-12 முதல் 21- வரை பொன்மலை வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கமாக ரயிலானது பொன்மலையிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News November 10, 2024

திமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்

image

விழுப்புரம் நகராட்சி உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், விழுப்புரம் நகராட்சி 18ஆவது வார்டு திமுக நிர்வாகி அரவிந்த் இல்ல திருமண வரவேற்பு விழாவில் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர், பொன்.கௌதமசிகாமணி இன்று (நவம்பர் 9) கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

News November 9, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (09.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 9, 2024

விழுப்புரம் மாவட்ட வேளாண்மை கணக்கெடுப்பு நிலை

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்ட அளவிலான வேளாண்மை கணக்கெடுப்பு நிலை II-க்கான கணினி வழி கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட புள்ளிவிவரத் துணை இயக்குநர் திரு.வீ.முத்துக்குமரன், கோட்டப் புள்ளிவிவரத் துணை இயக்குநர்கள் ப.அழகப்பன், செல்வராஜ் உட்பட பலர் உள்ளனர்.

News November 9, 2024

விழுப்புரத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் இன்று நடைபெற உள்ளது. இந்த முகாமின் மூலம் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் நியாய விலை கடை பொருட்கள் தொடர்பான புகார்கள் தொடர்பான மனுக்களை குடிமை பொருள் வழங்கல் வட்டாட்சியரிடம் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.

News November 9, 2024

விழுப்புரம் அருகே விபத்தில் மரணம் 

image

விழுப்புரம் சாலை அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் நேற்று தனது ஒன்றரை வயது பேரன் லட்சித்தை பைக்கில் அமர வைத்து சாலை அகரம் கெங்கையம்மன் கோவில் முன்பு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்த சங்கர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். குழந்தை லட்சித் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வளவனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.