Villupuram

News December 25, 2024

விழுப்புரம் அருகே கொலை; மேலும் ஒருவர் கைது 

image

வானூர் திருவக்கரை கல்குவாரியில், சில தினங்களுக்கு முன் ராஜதுரை என்பவரை முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் கொலை செய்து வீசியது. இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான தங்கபாண்டி மற்றும் புருஷோத்தமன் ஆகிய இருவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் விழுப்புரத்தில் பதுங்கி இருந்த புருஷோத்தமனை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் தங்கபாண்டியை தேடி வருகின்றனர்.

News December 25, 2024

துணை முதல்வருக்கு தகுதியானவர் துரைமுருகன்: ராமதாஸ் 

image

விழுப்புரத்தில் பா.ம.க., சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்காத தி.மு.க.அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,அப்போது தி.மு.க. தேர்தலில் போட்டியிட்டது முதல் தற்போது வரை அதிகம் எம்.எல்.ஏ. தேர்வானது வன்னியர் மக்கள் ஆதரவில் தான்.இப்போது தி.மு.க. பொதுச்செயலராக உள்ள துரைமுருகன் அவருக்கு முதல்வர் துணை முதல்வராவதற்கு அனுபவமும் அறிவும் தகுதியும் இருக்கிறது என்றார்.

News December 24, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (24.12.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 24, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் 26ஆம் தேதி சிறப்பு முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, வானூர், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களில் வரும் 26, 27 ஆகிய 2 தேதிகளில் முகாம்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 26ஆம் தேதி நடைபெறும் முகாம்களின் விவரங்கள் மேலே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும். ஷேர் பண்ணுங்க.

News December 24, 2024

விழுப்புரத்தில் திமுக பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு 

image

விழுப்புரத்தில் 10.5% இட ஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ராமதாஸ் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஏராளமான பாமகவினர் அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த திமுக பேனரை சிலர் கிழித்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News December 24, 2024

29 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12.07 லட்சத்தில் நலத்திட்ட உதவி

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில், நேற்று (டிச.24) நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பழனி தலைமை வகித்து முதியோா், விதவை, ஆதரவற்றோா் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பெற்றுப் கொண்டார். பின், திறனாளிகளுக்கு மின்கலத்தால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், திறன்பேசிகள் என மொத்தம் 29 பேருக்கு ரூ.12.07 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

News December 24, 2024

உயிரிழந்த சகோதரர்களுக்கு முதலமைச்சர் நிவாரணம்

image

மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி லோகேஷ், விக்ரம், சூர்யா ஆகிய 3 சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

News December 24, 2024

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திசை திரும்பியது

image

வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு ஆந்திர மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. இது, இன்று தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகக் கரையை நெருங்கி வரக்கூடும். இதனால், இன்று விழுப்புரம் உள்ளிட்ட வடதமிழக கடலோரப் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

News December 23, 2024

விழுப்புரம் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (டிச.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 23, 2024

காலை 5 முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து நெரிசல்

image

தமிழகத்தில், டிச.24ஆம் தேதி முதல் ஜன.2ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் விழுப்புரத்தில் உள்ள சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 5 மணி முதல் இரு மடங்கு அதிகமாக வாகனங்கள் சென்றன. மாலை 4 மணி வரை போக்குவரத்து நெரிசல் இருந்தது. போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!