India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் நகராட்சி திடலில் பாமக சார்பில் 10.5% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பலர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மேலும் திமுக பதாகைகளும் சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து திமுக செயலாளர் சர்க்கரை அளித்த புகாரின் பேரில் 10 பேர் மீதும், காவல் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் 37 பேர் மீதும் தாலுகா போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளது. ஆட்சியரகத்திலுள்ள குறைதீா் கூட்டரங்கில் நாளை முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, விவசாயம் சாா்ந்த தங்களது கோரிக்கைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை. தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலால், சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஷேர் பண்ணுங்க
கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு, தொழில் மேம்பாட்டு பயிற்சியுடன் ரூ.3 லட்சம் கடனுதவி வழங்கப்பட உள்ளது. கடன் தொகையில் 25%, அதிகபட்சம் ரூ.50,000 மானியம் வாங்கப்படும். இந்தக் கடனுதவியை பெற விருப்பமுள்ளவர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04146 – 223616, 8925534035, 944372801 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
ராகவன்பேட்டை, ஆசிரியர் நகர் உள்ளிட்ட இடங்களில், மழைநீர் வடியாதது குறித்து தேமுதிக பொதுச்செயாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் உள்ள பெரும்பாலான இடங்களிலும், 25 நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் அவதி அடைகின்றனர். தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருவெண்ணெய்நால்லூர், புதுப்பாளையம், சித்தலிங்கமடம், மெய்யூர், எடையார், அந்தியூர், மாம்பலப்பட்டு, மூலசமுத்திரம், வண்டார்கோயில், குணமங்கலம், மேப்புலியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (25.12.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் நடைபெறவுள்ள அமாவாசை திருவிழா மற்றும் திருவக்கரை அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறவுள்ள பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு, திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்த முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் நடைபெற்றது.
திருவெண்ணைநல்லூர் பேரூரில் உள்ள அல்லாசாமி குளத்தை இன்று வனத்துறை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். தொடர்ந்து குளத்தைச் சுற்றி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் பழனி, மாவட்ட செயலாளர் கௌதம சிகாமணி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
விழுப்புரம் நகரத்தில் நாளை(26-12-24) மின்தடை அறிவிப்பு. காகுப்பம், கிழக்கு சண்முகபுரம் காலனி, லட்சுமி நகா், ஆசிரியா் நகா், மகாராஜபுரம், குருவிலாஸ், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், பானாம்பட்டுபாதை, கம்பன்நகா், ராகவன்பேட்டை,ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் பராமரிப்பு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படும் என மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.