India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பன்னீர் கரும்புகள் அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில், ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் 30% கரும்புகள் சேதமாகி இழப்பு ஏற்பட்டதாக விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, 1 கரும்புக்கு ரூ.23 – ரூ.25 வரை உயர்த்தி வழங்க வேண்டும், தரகர்களின்றி அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அப்போது தான், விவசாயிகளுக்கான இழப்பீடை ஓரளவிற்கு ஈடுகட்ட முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆனைமடுவு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், கடந்த 2021ஆம் ஆண்டு மரவள்ளிக்கிழங்கிற்கு ஊடுபயிராக கஞ்சா செடி வளர்த்ததற்காக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி குற்றம் சாட்டப்பட்ட கண்ணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நிலம் தொடர்பாக அதிக அளவில் கோரிக்கை மனுக்கள் வருவதால், அவைகளை விரைந்து தீர்வு செய்யும் பொருட்டு வெள்ளிக்கிழமை தோறும் நிலம் தொடர்பான பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி வருகின்ற ஜன 3ஆம் தேதி நடைபெற உள்ள நிலம் தொடர்பான கூட்டத்தில் பொதுமக்கள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (27.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் மாவட்ட விவசாயிகள் குறைகளை போக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று நடைக்கவிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி இன்று அறிவித்துள்ளார்.
மேல்மலையனூர் அடுத்த நொச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்க இராமானுஜம். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவரை இணைய வழியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், இணைய வழி வர்த்தகத்தில் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி 15 தவணைகளாக ரூ.13,49,902 பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
திமுக ஆட்சியில் நடக்கும் பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற இருந்தது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி, ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி சிந்தூரா ராஜாவுக்கு, பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது நேற்று (டிச.26) வழங்கப்பட்டது. கடந்த மே மாதத்தில் நியூயார்க் நகரத்தில் நடந்த உலக அறிவியல் விழாவில் இந்தியாவுக்காக பங்கேற்ற இவருக்கு, ‘உலக அறிவியல் அறிஞர்’ (World Science Scholar) என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற சிந்தூரா ராஜா அந்த ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (26.12.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விக்கிரவாண்டி அருகே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று வந்து கொண்டிருந்த பக்தர்கள் வேன் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 34 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எதுவும் இல்லை. இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.