India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (25.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் அருகேயுள்ள கோலியனூர் வாலீஸ்வரர் கோயிலின் சிறப்பாக பாலாள ரிஷி கடின தவத்திற்கு திருஆசி தரும் விதமாக சிவபெருமான் இங்கு தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்த கோயிலை தொடர்ந்து வழிபட்டு வந்தால் துன்பங்கள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. துன்பங்கள் மறைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதை பகிரவும்
பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் – 04146-240602, திண்டிவனம்- 04147 – 228503, கோட்டக்குப்பம்- 0413-2236150. மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அவரச உதவிக்கு 1091. இதனை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மதுபோதையில் தகராறு செய்த தம்பியை கட்டையால் அடித்து கொன்ற அக்கா கைது செய்யப்பட்டார். மணிகண்டன் என்பவர் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது அக்கா அம்சவேணி கட்டையால் அடித்ததில் படுகாயமடைந்த மணிகண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த சையத் காஜா பாஷா(55), ராஜா(44) உள்ளிட்ட 6 பேர் காஷ்மீரை சுற்றிப் பார்க்க சென்றிருந்தனர். அங்கு துப்பாக்கிச் சூடு நடைபெற்றதை அறிந்து, அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து தமிழக அரசின் உதவியுடன் நேற்று சென்னை வந்தடைந்தனர்.
விழுப்புரம் ரயில்வே நிர்வாகம் இன்று (ஏப்ரல் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாரத்தில் 4 நாட்கள் (திங்கள், செவ்வாய் வெள்ளி சனி)ஆகியதேதிகளில் ( விருத்தாசலம் ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் மதுரை மானாமதுரை ராமநாதபுரம் )வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக விழுப்புரம் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (24.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் அருகே கோலியனூர் வாலீஸ்வரர் கோயில் வரலாறு. சாகாவரம் பெற்றிருந்த மகிஷாசுரன் தேவர்களையும், மக்களையும் துன்புறுத்தி வந்தான், அவனை அழிக்கச் சிவன் உத்தரவிட்டார். அவனை அழித்தவர்களுக்கு தோஷம் உண்டானது, தோஷம் நீங்க இத்தலத்துள்ள சிவபெருமாளை வணங்கி நிவர்த்தி அடைந்தனர். இந்த கோயிலில் வழிபட்டால் தலையெழுத்து மாறுமென்பது நம்பிக்கை.மாற்றத்தை எதிர்பார்க்கும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
விழுப்புரம் அருகேயுள்ள திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோயில் குலோத்துங்க சோழனால் எழுப்பப்பட்டது மற்றும் பழமை வாய்ந்தது . இந்த கோயிலில் ஐந்து திருமேனிகளோடு ஈசன் எழுந்தருளியுள்ளார். இங்கு வழிபட்டால் சகல பாவங்களும் விலகும் என்கிற நம்பிக்கை உண்டு. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். ஆனால், இவற்றை வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.