India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (31.12.24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15 அன்று சிறப்புடன் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு இப்போட்டிகளை விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 04.01.2025 அன்று காலை 7.00 மணிக்கு கோலியனூர் கூட்ரோடு என்ற இடத்தில் துவங்கப்படும் என ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
2024-ஆம் ஆண்டில் விழுப்புரத்தில் 392 திருட்டு குற்ற வழக்குகளில் 4 கொள்ளை, 28 வழிபறி, 360 திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 255 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ.1,50,40,250 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 34 கொலை வழக்குகளில் 62 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 17 கொலை வழக்குகளில் 38 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் மாவட்டம் முழுவதும் 2025ஆம் ஆண்டு புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1260 காவலர்கள் மற்றும் 62 இடங்களில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புத்தாண்டின் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை. இதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
திண்டிவனத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் சி.வி.சண்முகம் அவர்களின் தலைமையில் கட்சியில் இணைந்தனர். உடன் செஞ்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் க.சோழன் மற்றும் செஞ்சி கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வீ.ஜெயபிரகாஷ் அவர்கள் இருந்தனர்.
விழுப்புரத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கு ராபி, நவரை பருவத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நெல் பயிர், எள் மற்றும் கரும்பு பயிர்களுக்கு, அவசியம் பயிர் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவரை பருவத்தில் நெல்-நடவு செய்துள்ள விவசாயிகள் இன்றுக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இதன்படி, விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் கட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அஜய் குமார், உகர்சன் பரிக், பல்ராம் பரிக் ஆகிய 3 பேர் கஞ்சா சாக்லேட் வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விழுப்புரம் போதைப் பொருள் ஒழிப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், 3 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதித்தது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10 அடி உயர திருவள்ளுவர் சிலை புதிதாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை பலரும் ஆர்வத்துடன் பார்த்து, புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
விழுப்புரத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் நடைபெற இருந்த ஆர்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால், ஏராளமான போலீசார் ஆட்சியர் அலுவலகம் எதிரில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனை கட்டணத்தை நேற்று முதல் ஆன்லைனில் செலுத்தும் வசதி அமல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணங்கள் செலுத்தும் மையங்களில் தனி க்யூஆர்கோடு ஸ்கேனர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இனி பரிசோதனை எடுக்க செல்பவர்கள் எளிதாக கட்டணத்தை ஆன்லைனில் சிரமமின்றி செலுத்தி, பில் பெற்று பரிசோதனை செய்து கொள்ளமுடியும்.
Sorry, no posts matched your criteria.