India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி வரும் 4ம் தேதி அன்று காலை துவங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் இன்று (ஜன.2) அறிவித்து உள்ளது.மேலும், இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெறப்பட்ட வயது சான்று மற்றும் ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று (ஜன.1) புத்தாண்டையொட்டி அனைத்து சோதனைச் சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் 102 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டங்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்களில் நிலம் தொடர்பான கோரிக்கைகள் அதிகளவில் வரப்பெறுகின்றன. இவ்வாறு பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் முதல் வெள்ளிக்கிழமைகளில் நிலம் தொடர்பான கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் நடத்திட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய வாகனங்களால், நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டது. டோல்பிளாசாவில் வாகனங்கள் எளிதாக செல்ல 8 லேன்களும் திறக்கப்பட்டன. நேற்று (ஜன.1) இரவு 7 மணி வரை 30,000 வாகனங்கள் சென்னை நோக்கி சென்றன. விக்கிரவாண்டி டி.எஸ்.பி., நந்தகுமார் தலைமையிலான போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதி ஸ்தம்பித்து காணப்பட்டது.
விழுப்புரத்தில் 2024ஆம் ஆண்டில் 255 குற்ற வழக்குகளில் 300 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. 4 கொள்ளை, 28 வழிப்பறி, 360 திருட்டு என மொத்தமாக 392 குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 255 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 300 போ் கைது செய்யப்பட்டு, ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 34 கொலை சம்பவங்களில் 62 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (01.01.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 180 பேருக்கு ரூ.2.37 கோடி தீருதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த 28 நபா்களின் வாரிசுதாரா்களில் 11 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 17 பேருக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தனது சமூக வலைத்தளத்தில், “2025 ஆம் ஆண்டு சனநாயகம் தழைத்தோங்கும் ஒரு புதிய ஆண்டாக மலரட்டும், சாதி- மத அடிப்படையிலான வெறுப்பு அரசியலே இல்லாது ஒழியட்டும், சமூக நல்லிணக்கமும் சகோதரத்துவமும் பெருகட்டும் என யாவருக்கும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” என பதிவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர், விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் பெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் டிசம்பர் 2ஆம் தேதி முதல் செயல்படாமல் இருந்தது. தற்போது, தற்காலிக சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், ஜனவரி 2, 3 ஆம் தேதிகளில் செயல்பட தொடங்கும் என விழுப்புரம் விற்பனை குழுவின் செயலர் சந்துரு நேற்று அறிவித்துள்ளார்.
விழுப்புரம் நான்குவழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் இடையேயான இந்த சாலை விழுப்புரம்-புதுச்சேரி வரை 29 கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலை பணி முடிக்கப்பட்டு தற்காலிக பயன்பாட்டில் உள்ளது. இச்சாலையில் விழுப்புரம் அடுத்த கெங்கராம்பாளையத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. ஜன. 3ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.