India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படிக்கும் 4வயது சிறுமி செப்டிக் டேங்கில் விழுந்து (ஜன. 3) இன்று உயிரிழந்தார். இதுகுறித்து, தனியார் பள்ளிகளின் இயக்குனர் முத்துசாமி அவர்கள் சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலர் அறிவழகன் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பாமக மாவட்டச் செயலாளரும் மயிலம் சட்டமன்ற உறுப்பினருமான சிவகுமார், (ஜன.3) இன்று 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு சென்னையில் பாமக தலைவர் அன்புமணிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். பின்னர் அன்புமணி அவர்களுக்கு தினசரி நாள்காட்டியைக் கொடுத்து மகிழ்ந்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் வாழ்த்துப் பெற்றனர்.
தாம்பரம் – திருச்சி இடையே விழுப்புரம் வழியாக சிறப்பு ரயில். ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19 தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஜன் சதாப்தி சிறப்பு அதி விரைவு ரயில் இயக்கம். மறு மார்க்கத்தில் திருச்சியில் இருந்து 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19 ஆம் தேதிகளில் மாலை 5.35 மணிக்கு சிறப்பு ரயில் தாம்பரத்திற்கு இயக்கம் என தென்னக இரயில்வே அறிவித்தது
விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பம் வேதனை அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு தணிக்கை செய்யாத அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வரும் மாணவி, அதே பள்ளியில் இன்று (ஜன.3) பிற்பகல் உணவு இடைவெளியின்போது திறந்திருந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விழுப்புரம் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சரவணன்,காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று(ஜன.3)பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஆட்சியர் பழனி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “6,20,191 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்களை விற்பனையாளர்கள் வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் :தேர்வாணையத்தால் வெளியிடப்பட உள்ள TNPSC GROUP-IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஜன.8ஆம் தேதி முதல் (காலை 10 – மதியம் 1 மணி) நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடைய விரும்பும் மாணவர்கள் வரும் ஜன.7ஆம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (2.1.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத, குறைந்த அளவிலான மனவளர்ச்சி குன்றியவர், 75 சதவீதத்திற்கு மேல் மனநலம் குன்றிய தாய்மார்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் வகையில், மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கும் திட்டம் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.