Villupuram

News January 5, 2025

விழுப்புரத்தில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பரவுகிறது

image

விழுப்புரத்தில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோயால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு வகையான பாக்டீரியா தொற்று. ‘ரிக்கட்சியா’ எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் மற்றும் உயிரினங்கள், மனிதர்களை கடிக்கும்போது இந்த நோய் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. உடனே மருத்துவரை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 5, 2025

விழுப்புரம் எம்.பி ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது

image

2024ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை. ரவிக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுவர் நாளன்று (ஜனவரி 15) எம்.பி ரவிக்குமாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 1 சவரன் தங்கப்பதக்கம் வழங்க உள்ளார்.

News January 4, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (04.01.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 4, 2025

நீதிமன்ற காவலில் தனியார் பள்ளி முதல்வர்

image

விக்கிரவாண்டில் உள்ள தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் நேற்று லியா லக்ஷ்மி என்ற சிறுமி விழுந்து உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக பள்ளி தாளாளர் உட்பட 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த நிலையில் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக் மேரி ஆகியோரை பத்தாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி இன்று (ஜன.4) உத்தரவிட்டுள்ளார்.

News January 4, 2025

தனியார் பள்ளி பொறுப்பாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை, அனைத்து தனியார் பள்ளி பொறுப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தங்களது பள்ளி வளாகத்தில் உள்ள நீர் தொட்டி மற்றும் சுற்றுச்சுவர் அடுக்குமாடி கட்டடங்கள், கிணறுகள், கழிவறைகள், முதலியவற்றின் தன்மையை சுய ஆய்வு செய்து, தங்களது கல்வி நிலையங்களின் இடங்களை சுத்தமாக வைத்துக்கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறை அறிவித்துள்ளது.

News January 4, 2025

பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

image

“LKG படிக்கும் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்வது, தனியார் பள்ளியின் கடமை. குழந்தையின் இறப்பிற்கு பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் பெற்றோருக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி செப்டிக் டேங்கில் விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

News January 4, 2025

விழுப்புரத்தில் 6 பேருக்கு ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல்

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 3-ம் தேதிவரை மாவட்டத்தில் சாதாரண காய்ச்சலில் 129 பேரும், டெங்குவில் 14 பேரும், சிக்கன்குனியா ஒருவரும், ஸ்க்ரப் டைபஸ் 6 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் ஒரு வகையான பாக்டீரியா தொற்று, இதனால் உயிரிழப்பு ஏற்படாது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

News January 4, 2025

விக்கிரவாண்டியில் LKG சிறுமி பலி 2/3

image

பின்னர், குழந்தையின் உடல் மீட்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிறுமி உயிரிழந்த தகவல் அறிந்து பள்ளியின் முன் பெற்றோர் முற்றுகையிட்டனர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News January 4, 2025

விக்கிரவாண்டியில் LKG சிறுமி பலி 1/3

image

விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் லியா லட்சுமி என்ற சிறுமி , LKG படித்து வந்தார். நேற்று மதியம் கழிவறை சென்ற அவர் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. கழிவுநீர் தொட்டியின் மீது இருந்த தகர ஷீட் சிதிலமடைந்து இருந்ததாகவும், அதன் மீது சிறுமி ஏறி நின்றபோது உடைந்து உள்ளே விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது.

News January 4, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (03.01.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டு உள்ளன.

error: Content is protected !!