India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம்: அதனூர் கூட்ரோடு அருகே நேற்று (செப். 18) நடந்த சாலை விபத்தில், சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் தீனதயாளன் (27) உயிரிழந்தார். சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் மீது உரசியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி அவர் மீது ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. 8th, SSLC, +2, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.19) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
▶️கரும்பு திருமண மண்டபம், விழுப்புரம்
▶️ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், பிடாகம்
▶️பஞ்சாயத்து அலுவலக வளாகம், பரனூர்
▶️VPRC கட்டிட வளாகம், செண்டூர்
▶️VPRC கட்டிட வளாகம், சாலவாடி
▶️ராமானூஜர் திருமண மஹால், பல்லரிபாளையம், சித்தலிங்கமடம்
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று முதல் அக்டோபர் 2 ஆம் தேதிவரை ‘நலமான பெண்கள் வளமான குடும்பம்’ என்ற சிறப்பு மருத்துவ முகாம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
சிறுவாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இன்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கலந்து கொண்டு மகளிருக்கு சுகாதார பெட்டகங்களை வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோ.குப்பம் கிராமம் நந்தன் கால்வாய் அருகே மலை குன்றில் சாராயம் காய்ச்சுவதற்காக 20 லிட்டர் அளவு கொண்ட ஊரல்களும், 2 லிட்டர் சாராயம் மற்றும் வெள்ளம் ஆகியவற்றை வைத்திருந்த சோ.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரை போலீசார் இன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த மின்மாற்றியை, யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் வேறு இடத்துக்கு மாற்றி நடவடிக்கை எடுத்த போக்குவரத்து காவலர்களை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சரவணன் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 18) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அடுத்த கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில் இன்று சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு, இணைய வழி குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சமூக நீதி தொடர்பான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை பனை மரங்கள் பாதுகாக்கப்படுவதற்கு வழிவகை செய்கிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் பனை மரங்களை வெட்டுதற்கு தேவை ஏற்பட்டால், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும். இந்த நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பனை மரங்களை அழிவிலிருந்து காப்பாற்ற எடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலை. தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <
Sorry, no posts matched your criteria.