India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய். 2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய். 3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். 4.NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 189 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், கெடார் 157 மில்லி மீட்டர், சூரப்பட்டு 112 மில்லி மீட்டர், கோலியனூர் 105 மில்லி மீட்டர், வளவனூர் 118 மில்லி மீட்டர், செஞ்சி 62 மில்லி மீட்டர், முகையூர் 106 மில்லி மீட்டர், அரசூர் 45 மி.மீ, நேமூர் 31.2 மில்லி மீட்டர், அனந்தபுரம் 50.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

விழுப்புரம் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் கனமழை பெய்து வருகிறது. மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல்கள் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம்: அதனூர் கூட்ரோடு அருகே நேற்று (செப். 18) நடந்த சாலை விபத்தில், சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் தீனதயாளன் (27) உயிரிழந்தார். சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் மீது உரசியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி அவர் மீது ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. 8th, SSLC, +2, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.19) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
▶️கரும்பு திருமண மண்டபம், விழுப்புரம்
▶️ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், பிடாகம்
▶️பஞ்சாயத்து அலுவலக வளாகம், பரனூர்
▶️VPRC கட்டிட வளாகம், செண்டூர்
▶️VPRC கட்டிட வளாகம், சாலவாடி
▶️ராமானூஜர் திருமண மஹால், பல்லரிபாளையம், சித்தலிங்கமடம்
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.