Villupuram

News January 10, 2025

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் 6.20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யும் பணி, நேற்று (ஜன.9) தொடங்கியது. விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயில் அருகிலுள்ள நியாயவிலைக் கடையில், ஆட்சியர் சி. பழனி பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். அப்பகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, வேஷ்டி – சேலை, முழுநீள கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

News January 9, 2025

திருவெண்ணைநல்லூரில் புதைக்கப்பட்ட சடலம் மீட்பு

image

திருவெண்ணெய்நல்லூர் அருகே சேமங்கலம் கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதம் காணாமல் போன முத்துக்குமரனின் சடலத்தை அவரது நண்பர் தமிழரசனின் நிலத்தில் இருந்து போலீசார் இன்று (ஜன.9) தோண்டி எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பணத்திற்காக முத்துக்குமரனை அடித்து கொலை செய்த தமிழரசன், அவரது உடலை தனது நிலத்தில் புதைத்துவிட்டு போலீசாரிடம் மலட்டாற்றில் புதைத்ததாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 9, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (09.01.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 9, 2025

பொங்கல் விழா: கலை போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

image

விழுப்புரத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கோலம், ஓவியம், புகைப்படம், ரீல்ஸ், பாராம்பரிய உடை, மண்பானை அலங்கரித்தல், செல்பி, ஆவணப்படங்கள் ஆகிய போட்டிகளும், நாட்டுப்புற கதைகள், பாடல்கள் சிலம்பாட்டம், கரகம், ஏறு தழுவுதல், ஜல்லிகட்டு மாடுகளை தயார்படுத்துதலை 1 நிமிடத்திற்குள் ரீல்ஸ்-ஆக எடுத்து போட்டியில் பங்கேற்கலாம். இதில் 1 – 13 வயதுக்குட்பட்டோர் மட்டும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 9, 2025

இந்திய மருத்துவ சங்கம் ஆலோசனைக் கூட்டம்

image

இந்திய மருத்துவ சங்கத்தின் செஞ்சி கிளையின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கம் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மருத்துவ நிறுவனங்களின் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சங்கத்தலைவர் மருத்துவர் கோ.அண்ணாமலை, செயலாளர் பி.என்.ரமேஷ்பாபு, பொருளாளர் வி.கே. மாரிமுத்து மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News January 9, 2025

இலவச தையல் மிஷின் வழங்க 232 பேர் தேர்வு

image

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு 2024 – 25ம் நிதியாண்டுக்கான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்க மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான நேர்முகத் தேர்வு நேற்று (ஜன.8) நடைபெற்றது. இதில், 237 பேர் பங்கேற்ற நிலையில் 232 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News January 8, 2025

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை ஆய்வுக் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (08.01.2025) நடைபெற்றது. உடன் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) முகுந்தன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (ச.பா.தி) ராஜசேகர் உட்பட பலர் உள்ளனர்.

News January 8, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (08.01.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 8, 2025

பள்ளி சிறுமி உயிரிழந்த விவகாரம்: விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவறை தொட்டியில் பள்ளி சிறுமி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பள்ளி தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டோமினிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ் ஆகிய 3 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மணிமொழி இன்று உத்தரவிட்டுள்ளார்.

News January 8, 2025

செங்கழுநீர் அம்மன் கோயில் மண்டல பூஜை

image

மயிலம் அருகேயுள்ள தென்கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோயில் மகா கும்பாபிஷேம் கடந்த டிசம்பர் 5ம் தேதி நடந்தது. இந்நிலையில் நேற்று (ஜன.7) அம்மனுக்கு பால், சந்தனம் தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம்  நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர்.

error: Content is protected !!