India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்ற விழுப்புரம் எம்.எல்.ஏ. லட்சுமணன், விழுப்புரத்தில் மழை வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் சேதம் அடைந்துள்ளது, மேலும், வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும், மருதூர் ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும், தளவானூரில் தடுப்பணை கட்டி தரவேண்டும், சாலமேடு பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும் என கூட்டத்தொடரில் பேசினார்.
விழுப்புரம் ஜானகிபுரத்தில் உள்ள வின்னர் பயிற்சி மையத்தில் ரத்த தான சிறப்பு முகாம் நேற்று (ஜன.11) நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் விஜயலட்சுமி தலைமையிலான குழுவினர், கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினர் செய்திருந்தனர். இந்த முகாமில் பொதுமக்கள், மாணவர்கள் என பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.
விழுப்புரத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நேற்று ஆட்சியர் பழனி தொடங்கி வைத்தார். அப்போது அவர் போகிப் பண்டிகையின்போது பொதுமக்கள் பிளாஸ்டிக் மற்றும் ரசாயனம் கலந்த பொருட்களை தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்படுகிறது. எனவே, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (11.01.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
விக்கிரவாண்டி சிறுமி உயிரிழந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பதிவிட வேண்டாம். மேலும் வதந்திகளை நம்ப வேண்டாம். சிறுமி பலி விவகாரத்தில் 3 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் குழந்தை தனியாக சென்று கழிவு நீர் தொட்டியில் விழுந்தது தெரியவந்துள்ளது என காவல்துறை தரப்பில் இன்று (ஜனவரி 11) விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை, கலெக்டர் பழனி இன்று நேரில் பர்வையிட்டு, ஆய்வு செய்தார். திண்டிவனம்-சென்னை சாலையில் நகராட்சி சார்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி, மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணி, மேல்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமானப் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு, வனத்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்களை சந்திக்க வரும் பார்வையாளர்கள் சால்வையை தவிர்த்து நூலகங்களுக்கு உதவிடும் வகையில் புத்தகங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் சி.பழனி இன்று (ஜன.11) கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (ஜன.10) நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் தலைமை வகித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற விவரங்களை காவல் அலுவலர்களிடம் எஸ்.பி.சரவணன் கேட்டறிந்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் இழப்பினை ஈடு செய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் விழுப்புரம் மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டு சாகுபடி செய்யும் காரீப், சம்பா, ராபி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் விவரங்களை அறிய அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் என வேளாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.