Villupuram

News January 13, 2025

இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பலி

image

விழுப்புரம் – புதுச்சேரி மேம்பால சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சடம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 3 பெண்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 13, 2025

விழுப்புரம் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு

image

விக்கிரவாண்டி பள்ளியில் சிறுமி உயிரிழந்ததை அடுத்து கடந்த 6,7ம் தேதிகளில் மாவட்டத்தில் உள்ள 139 தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பள்ளிகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை ஏழு நாட்களுக்குள் சரி செய்து புகைப்படத்துடன் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் பள்ளி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

News January 13, 2025

விழுப்புரம் அரசு மாதிரிப் பள்ளியில் பொங்கல் திருவிழா

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன14,15 ஆகிய தேதிகளில் மருதம் குழுவின் சார்பில், விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகள், புத்தகக் கண்காட்சி, சிறுதானியங்களின் உணவுத் திருவிழா என பண்பாட்டு அசைவுகளின் பாரம்பரியமிக்க கலாச்சார திருவிழா நடைபெற உள்ளது என மருதம் ஒருங்கிணைப்பு குழு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

News January 13, 2025

மாசில்லா போகியை கொண்டாட உறுதியேற்போம்

image

போகி பாண்டியான இன்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் கடும் காற்று மாசு ஏற்படுகிறது. இந்த போகிக்கு பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பெயரில் துணி, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை விட பிழையனவாம் கோவம், வெறுப்பு களைந்து புதியனவாம் அன்பு, பாசம் வளர்ப்போம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 13, 2025

தனியார் பேருந்து மோதி வாலிபர் பலி

image

கடலூரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மனோஜ்குமார்(25), பெரம்பலூரை சேர்ந்த வினோத்(24) ஆகிய இருவரும் சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் பகுதியில் வந்தபோது திருவண்ணாமலை நோக்கி வந்த தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜ்குமார் உயிரிழந்தார்.

News January 12, 2025

விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (12.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News January 12, 2025

மாவட்ட செயலாளர் நேரில் சென்று ஆய்வு

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விழுப்புரம் வருகை தந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதற்கான முன்னேற்பாடு பணிகளை விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் அ‌.சிவா மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News January 12, 2025

விழுப்புரம் பேருந்து நிலையங்களில் அலைமோதும் கூட்டம்

image

பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஜன.12) கொண்டாடப்படுகிறது. தொடர் விடுமுறையால் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், பொருட்கள் வாங்க வந்தவர்கள் என ஏராளமானவர்கள் பேருந்துகளில் பயணித்தனர். இதனால் நேற்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.

News January 12, 2025

விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளர் அறிக்கை

image

விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் அவர்களின் அறிக்கை தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் 14ம் தேதி காலை 8.30 மணிக்கு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வனத்துறை அமைச்சர் தலைமையில் கழக செயலாளர் டாக்டர் பொன்.கௌதமசிகாமணி முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

News January 12, 2025

முதலமைச்சர் வருகை; மேடை அமைக்கும் பணிகள் தீவிரம் 

image

விழுப்புரத்தில் கோவிந்தசாமி மணி மண்டபம், தியாகங்கள் மணிமண்டபத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சென்ற ஆண்டு திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் ஃபெஞ்சல் புயல் காரணமாக இந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் இந்த மாதம் 28ஆம் தேதி மணி மண்டபங்களை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ள நிலையில், இதற்கான மேடை அமைக்கும் பணிகள் அப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

error: Content is protected !!