Villupuram

News January 14, 2025

18,166 விவசாயிகளுக்கு ரூ.29 கோடி சிறப்பு ஊக்கத்தொகை

image

கடந்த 2023-24-ம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு பதிவு செய்து விழுப்புரம் மற்றும் அதை சுற்றியுள்ள 6 சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு உற்பத்தி செய்து வழங்கிய விவசாயிகளுக்கு கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத்தொகையாக ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.215 வீதம் சம்பந்தப்பட்ட 18,166 விவசாயிகளுக்கு ரூ.29 கோடியே 21 லட்சம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

News January 14, 2025

ஆற்றுத்திருவிழாவிற்கு தடை இல்லை 

image

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் சுற்றி உள்ள பகுதிகளில் சங்கராபரணி ஆற்றுப்பகுதிகளிலும் பல இடங்களில் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இந்தாண்டு ஆற்றுத்திருவிழா நடக்காது என தகவல் பரவி வந்த நிலையில், இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆற்றுத்திருவிழாவிற்கு இதுவரை தடை போன்ற எவ்வித உத்தரவும் இல்லை போடவில்லை என கூறினர்.

News January 14, 2025

விவசாயிகள் விதை பரிசோதனை செய்ய வேண்டும் : கலெக்டர்

image

விழுப்புரம் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் விதைப் பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் விதைகள் தரமாக உள்ளதா என்பதை பரிசோதித்து சாகுபடி செய்ய வேண்டும். ஆய்வு முடிவுகள் விவசாயிகளின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். ஒரு விதைக்கு ஆய்வு செய்ய கட்டணமாக ரூ.80 செலுத்த வேண்டும் என விதை பரிசோதனை நிலைய அலுவலர் சந்தோஷ் குமார் கூறியுள்ளார்.

News January 14, 2025

விழுப்புரம் ரயில் நிலையத்தில் தடம் புரண்ட ரயில்

image

விழுப்புரம் ரயில் நிலையத்தில் புதுச்சேரி ரயில் இன்று (ஜன.14) காலை தடம் புரண்டது. சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழ் இறங்கியது. பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்ட நிலையில் இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

News January 14, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணி

image

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தும் வகையில் எஸ்.பி. சரவணன் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆறு, குளம், கடல் ஆகிய நீர்நிலைகளில் இறங்குவதை தவிர்க்க வேண்டும். சட்டம் – ஒழுங்கு சீர்குலைக்கும் விதமாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி தெரிவித்துள்ளார்.

News January 14, 2025

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் எஸ்பி சரவணன் தலைமையில் 1300 காவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர் நிலைகளில் இறங்குவதை தவிர்க்க வேண்டும். புகார்களுக்கு 94981-81229 & 94981-00485 என்று எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

News January 14, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (13.01.2025) இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 13, 2025

2023-24 ஆண்டிற்கான ஈவுத்தொகை வழங்கிய அமைச்சர்

image

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த க.பொன்முடி தமிழ்நாடு வனத்தோட்ட கழகத்தின் 2023-24 தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகை ரூ.19.49-இல் இடைக்கால பங்கு ஈவுத்தொகையான ரூ.7.60 அன்று வழங்கப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள ஈவுத்தொகையான 11 கோடி, 89 லட்சத்து, 1 ஆயிரத்து 744 ரூபாய்க்கான வங்கி வரவு தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

News January 13, 2025

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்

image

தமிழ் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு முதல்வர்  மு.க.ஸ்டாலினை, வனத்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் கௌதமசிகாமணி ஆகியோர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். உடன் மாநில ஆதிதிராவிட நலக் இணைச் செயலாளர் செ.புஷ்பராஜ் உடன் இருந்தார்.

News January 13, 2025

விலையில்லா தையல் இயந்திரங்கள்: கலெக்டர் வழங்கல்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் சி.பழனி வழங்கினார்.

error: Content is protected !!