India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல் பண்டிகையை ஒட்டி விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச் சாலை, எல்லீஸ்சத்திரம் புறவழிச்சாலை, அண்ணாமலை ஓட்டல் புறவழிச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட எப்பகுதிகளிலும் யாரும் வாகன ரேசில் ஈடுபடுவதோ நடத்துவதோ கூடாது. மீறுபவர்கள் தேசிய நெடுஞ்சாலை சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (15.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
விழுப்புரத்தில் சாலையோரம் வசிக்கும் பெண்கள் மற்றும் முதியோரிடம் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் சாலையோரம் தனியாக இருந்த வயதான பெண்களை தாக்கி அவர்கள் அணிந்திருந்த காதணிகளை கொள்ளையடித்து சென்ற நபர் கைது, அவரிடமிருந்து 36.5 கிராம் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
விக்கிரவாண்டி டோல் கேட் பிளாசாவை நேற்று முன்தினம் 52 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன. 2ஆவது நாளாக இன்று காலை 7 மணி வரை 58 ஆயிரம் வாகனங்கள் கூடுதலாக சென்றன. இன்றும் வாகனங்கள் அதிகளவில் செல்லக்கூடும் என விக்கிரவாண்டி போக்குவரத்து போலீசார், டோல் பிளாசா ஊழியர்கள் வாகனங்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.15) விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து திருவள்ளுவர் புகழ் பாடி முழக்கமிட்டார். அதைத் தொடர்ந்து சிறுவர், சிறுமிகளுக்கு திருவள்ளுவர் புத்தகத்தை வழங்கினார். இந்த நிகழ்வின் போது திமுக மாவட்ட செயலாளர் பொன்கௌதம சிகாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக ஜனவரி 19ம் தேதி தூத்துக்குடியில் இருந்து மாலை 4:25க்கு தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினமான இன்று (ஜன.15) அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது, கடைகளை திறந்து வைக்கவும் கூடாது, மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதார சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை ஒட்டி, 5 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்ததை தொடர்ந்து சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பொங்கலை கொண்டாட தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட துவங்கினர். இதனால் விக்கிரவாண்டி டோல்பிளாசவை கார், பஸ் என வாகனங்கள் தொடர்ந்து அணி வகுத்து சென்றன. அதன்படி நேற்று 4வது நாளாக தென்மாவட்டங்களுக்கு இரவு 7:00 மணி வரை மொத்தம் 32 ஆயிரம் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (14.01.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் க.பொன்முடி, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன்.கௌதம சிகாமணி ஆகியோர் குடும்பத்துடன் கலந்துகொண்டு கொண்டாடினர். மேலும், பொதுமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.