India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல் முடிந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக ஜன.17,18,19,20 ஆகிய நான்கு நாட்கள் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பொதுமக்கள் அதிகளவில் பயணிக்க வாய்ப்பு உள்ளதால், கூட்ட நெரிசலை தவிர்த்திடும் பொருட்டு, பொதுமக்கள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் சிறுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி மாற்ற கோரி பள்ளி மாணவியின் தந்தை பழனிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, மேலும் விசாரணை வரும் பிப்ரவரி 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விசிக பொதுச் செயலாளருமான ரவிக்குமார் இன்று (ஜனவரி 17) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனியை நேரில் சந்தித்துத் தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பெரியார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடியிடம், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, எக்ஸ் தளத்தில் சமஸ்கிருதத்தில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்திருப்பது பற்றி நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர், தமிழ்நாடு, தமிழ்மொழி என்றாலே வெறுப்புடைய ஒருவரைத்தான் கவர்னராக போட்டுள்ளனர். அவர் மொழி உணர்வுள்ள தமிழகத்தில், தமிழ் நாட்டின் அரசியலில் தலையிடுவது மிக மோசமானது என்றார்.
கீழ் மயிலம் பகுதியை சேர்ந்தவர் மோகன். 17 வயது சிறுமியை காதலித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதித்த சிறுமியை, பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 2 மாதம் கா்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். பின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மோகனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பல்வேறு கிராமங்களில் காணும் பொங்கலை முன்னிட்டு, சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் உத்தரவின் பேரில், விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம் கோட்டக்குப்பம் காவல் உள்கோட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை (ஜன.18) ஆற்றுத்திருவிழா கொண்டாடுவது தொடர்பாக பாதுகாப்பு மற்றும் முன்னேச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலெக்டர் பேசியதாவது, தென்பெண்ணையாற்றின் கரையோரங்களில் வெள்ளநீர் வழிந்தோடுவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக திருவிழாவின் போது, பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, மீன்பிடிக்கவோ வேண்டாம் என தெரிவித்தார்.
திண்டிவனம் கிடங்கலை சேர்ந்த புனிதன் -சரண்யா ஆகியோரின் மகள் யுக்திகாஹீ (14). காணும் பொங்கலை முன்னிட்டு இன்று(ஜன.16) மரக்காணம் அருகே உள்ள முதலியார் குப்பம் கடற்கரைக்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கி இறந்து விட்டார். இரண்டு மணி நேர தேடுதலுக்கு பிறகு காலாப்பட்டு கடற்கரையில் அவரின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (16.01.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விராட்டிகுப்பம் பாதை ஆர்.ஆர் நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (76) ஓய்வு பெற்ற அரசு ஊழியர் இவரது வீட்டின் முன்பு நேற்று முன்தினம் இரவு விழுப்புரத்தை சார்ந்த சதீஷ் (26) உள்ளிட்ட மூன்று பேர் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு தங்கராஜை தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று (ஜன 15) வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.