Villupuram

News January 18, 2025

லஞ்சம் வாங்கிய இரு காவலர்கள் தற்காலிக பணிநீக்கம்

image

கோட்டகுப்பம் மதுவிலக்கு சோதனை சாவடியில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய காவலர்களான கலையரசன் மற்றும் காந்திமோகன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக பணி நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். காவலர்கள் லஞ்சம் வாங்குவது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

News January 18, 2025

ஆற்றுத்திருவிழாவிற்கு செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு

image

ஆற்றுத்திருவிழாவுக்கு செல்லும் பொதுமக்கள் இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது  கவனமாகவும், பொறுமையாகவும் செல்லவும். பெற்றோர்கள் குழந்தைகளை நீரில் விளையாட அனுமதிக்காதீர்கள். பார்ப்பதற்கு சிறிய பள்ளமாக தெரிந்தாலும் உள்ளே பெரிதாக இருக்க வாய்ப்புண்டு. மேலும், மது அருந்திவிட்டு ஆற்றில் இறங்காதீர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

News January 18, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் 1,200 போலீசார் குவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில், இன்று (ஜன.18) ஆற்றுத்திருவிழா நடைபெற உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அருகே பிடாகம், அத்தியூர், திருவாதி உள்ளிட்ட 24 இடங்களில் ஆற்றுத்திருவிழா நடைபெற உள்ளது. ஆற்றுத்திருவிழா பாதுகாப்பு பணியில் எஸ்.பி. சரவணன் தலைமையில், 2 ஏடிஎஸ்பிக்கள், 7 டிஎஸ்பிக்கள் முன்னிலையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News January 18, 2025

விழுப்புரத்தில் கனரக வாகனங்கள் இன்று செல்ல தடை

image

விழுப்புரத்தில் இன்று 24 இடங்களில் ஆற்றுத்திருவிழா நடக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ள இருப்பதால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க கோலியனூர் கூட்டு சாலை – சின்னக்கள்ளிப்பட்டு வரை கனரக வாகனங்கள் செல்ல விழுப்புரம் போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அரசூர் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 18, 2025

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

விழுப்புரம் மாவட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு மாதத்தை யொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நேற்று (ஜன.17) திருச்சி நெடுஞ்சாலையில் நடந்த நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா விஜயரங்கன், தலைமை காவலர் வினோத், லட்சுமிநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 18, 2025

விழுப்புரம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள்

image

பொங்கல் பண்டிகையை முடித்து பயணிகள், சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிச் செல்ல ஏதுவாக இன்றும், நாளையும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்த்திடும் பொருட்டு தங்களின் பயணத்தை முன்னதாக திட்டமிட்டு சிறப்பு பஸ்களின் இயக்கத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 18, 2025

தென்பெண்ணையாற்றில் அதிகாரிகள் ஆய்வு

image

மணம்பூண்டியை அடுத்த தெண்பெண்ணை ஆற்றில் நாளை நடைபெறும் ஆற்று திருவிழாவை முன்னிட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட வழங்கல் மற்றும் நூகர்வோர் பாதுக்காப்பு அலுவலர் சுப்பிரமணியன், திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், நகராட்சித் தலைவர் டி.என்.முருகன், காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் பற்றி ஆலோசித்தனர்.

News January 17, 2025

அரகண்டநல்லூர் ஏழைகளுக்கு லையன்ஸ் சங்கம் உதவி 

image

அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் ஆற்றுவெள்ளம் புகுந்து வீடுகள் பெருமளவில் சேதமடைந்த ஏழை குடும்பத்தினருக்கு திருக்கோவிலூர் கோவில் நகர லையன்ஸ் சங்கம் மற்றும் டவுன் லையன்ஸ் சங்கம் சார்பில் உணவு பொருட்க்கள் மற்றும் உடைகள் வழங்கப்பட்டது.

News January 17, 2025

விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (17.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News January 17, 2025

மத்திய அமைச்சருக்கு விழுப்புரம் எம்பி கடிதம்

image

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இன்று ஜனவரி 17 எழுதியுள்ள கடிதத்தில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இந்தியாவில் பெண்களிடையே 3ஆவது பொது புற்றுநோயாக உள்ளது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முதன்மையாக எச்பிவி-யால் ஏற்படுகிறது. எனவே, வரவிருக்கும் பட்ஜெட்டில் கருவாய் புற்று நோய் தடுப்பூசிக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!