India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கண்டம்பாக்கம் காலனியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மணிகண்டன். இவர் நேற்று காலை வேலைக்கு சென்றுள்ளார். இவரது கூரை வீட்டில் தந்தை மற்றும் மாற்றுத்திறனாளி சகோதரர்கள் இருவர் இருந்துள்ளனர். மாலை 5 மணிக்கு வீடு திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டிலிருந்த மூவரையும் பத்திரமாக மீட்டனர். தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
கண்டமங்கலம் கோட்டம், சொர்ணாவூர் துணை மின் நிலையம் மற்றும் கஞ்சனூர் துணை மின் நிலையம் ஆகிய இரு இடங்களில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த இரு மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் இடங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்..
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (19.01.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 21.1.2025 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, வண்டிமேடு, வீராட்டிக்குப்பம், பாப்பான்குளம், திருவாமாத்தூர், பிடாகம், ஜானகிபுரம், கீழ்பெரும்பாக்கம், ஆனாங்கர், பானாம்பட்டு, கோலியனூர், மரகதபுரம், பொய்யப்பாக்கம், வழுதரெட்டி, V.அகரம், தொடர்ந்தலூரில் மின்தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெறும் பொதுக்கூட்டம் நாளை (ஜன.20) மாலை 6:00 மணி அளவில் விழுப்புரம் மந்தகரை திடலில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் C.Ve.சண்முகம் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து அலுவலகப் பணிக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் சொந்த ஊர் செல்வதற்காக போக்குவரத்து கழகம் சார்பில் அதிக அளவில் பேருந்துகள் விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.
விழுப்புரம் கோட்ட அளவில், ஜனவரி மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் ஜன.22 அன்று காலை 10.30 மணியளவில் விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில், விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி மற்றும் வானூர் கண்டாச்சிபுரம் வட்டங்களுக்குட்பட்ட அனைத்து விவசாய பிரதிநிதிகள் தவறாது கலந்துகொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சார்பில் இன்று (ஜன.19) நடைபெறும் மருத்துவ முகாமிற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்குகிறார். இம்முகாமை அமைச்சர் பொன்முடி துவக்கி வைக்கிறார். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த பரிசோதனை, கண் பரிசோதனை, பல் பரிசோதனை மற்றும் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (18.01.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.