India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முதலமைச்சரால் புதுமைபெண் தமிழ்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நாளை 25ம் தேதி மாலை 4 மணி முதல் அனைத்து கல்லூரி மாணவர்களையும் வண்ணத்திரை மூலமாக நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அந்தந்த கல்லூரி முதல்வர்கள் தயார் செய்திட விழுப்புரம் கலெக்டர் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தென்பசியார் கிராம நிர்வாக அலுவலர் பொன்னைவனம் என்பவர் பட்டா மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கியதால் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம், துறிஞ்சிப்பூண்டியில் கிணற்றில், முகம் சிதைந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது. போலீசார் விசாரணையில், இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்கொடி என்பது தெரியவந்தது. அவரைக் கொலை செய்தது, ஜெயக்கொடியின் கணவரான பழனிவேலுவின் முதல் மனைவியின் 2வது மகனான பிரகாஷ்ராஜ் என்பதும் தெரியவந்துள்ளது. சொத்துத் தகராறில் தனது சித்தியை அடித்துக் கொலை செய்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி டிசம்பர் முதல் வாரத்தில் தமிழக முழுவதும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெறும் என விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக கூட்டத்தில், வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு கோரி டிசம்பர் முதல் வாரத்தில் இளைஞர்களைக் கொண்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக இந்தப் போராட்டங்கள் நடக்கும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அன்புமணி டிச.17 சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், ராமதாஸின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை மைதானத்தில், போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் செப்.26 அன்று காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படுகிறது. இதில் 17 நான்கு சக்கர வாகனங்கள், இரண்டு மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 85 இரு சக்கர வாகனங்கள் உட்பட மொத்தம் 104 வாகனங்கள் உள்ளன. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் ரூ. 2000 டோக்கன் கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை பகுதியில் நடந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநரைக் கைது செய்ய வலியுறுத்தி, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அவரது உடலுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலகியது. இதையடுத்து, காவல்துறையினர் வந்த சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்தவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் பாமக நிறுவனர் ராமதாஸ் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, ‘கிராமம் தோறும் மக்கள் சந்திப்பு’ என்ற நிகழ்ச்சியை தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அக்டோபர் 4ம் தேதி ராமதாஸ் தொடங்குகிறார்.

உங்கள் பகுதி தண்ணீர் பாதுகாப்பானது தானா? குடிக்கவும் சமைக்கவும் ஏற்றது தானா? என்பதை அறிந்து கொள்ளுங்கள். விழுப்புரத்தில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நீரின் தரத்தைப் பரிசோதிக்கும் ஆய்வகங்கள் உள்ளது. அங்கு உங்கள் தண்ணீரை சுத்தமான புதிய பிளாஸ்டிக் கேனில் 2 லிட்டர் அளவு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுத்த தண்ணீர் குடிக்க உகந்ததா என அங்கு பரிசோதித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும். ஷேர்!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் நேற்று மாலை, தண்டவாளத்தைக் கடந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (33) மீது, விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.