India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்க வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலின் 28ம் தேதி காலை 10.00 மணிக்கு, ஜானகிபுரம் பைபாஸ் சந்திப்பு அருகே அரசு சார்பில் கட்டியுள்ள கோவிந்தசாமி நினைவு மண்டபம், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கான மணிமண்டபத்தை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதனால் அவ்விடத்தை டி.ஐ.ஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நாளை (ஜன.26) ஊராட்சி தலைவர்கள் தலைமையில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்படும். மேலும், ஒப்புதல் தீர்மானங்களும் கொண்டு வரப்படும். இதனால் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
நாட்டின் குடியரசு தினம் ஜன.26ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக காவல்துறை மைதானத்தில் மாவட்ட கலெக்டர் பழனி தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று, தியாகிகளுக்கு மரியாதை செய்து, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜன.26ம் தேதி ஊராட்சி தலைவர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்படும். 2024-25 ஆம் ஆண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
விழுப்புரம் மீனாட்சி ஆறுமுகம் திருமண மண்டபத்தில் நாளை (ஜன.25) அவள் விகடன் வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2 நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காலை 9:00 மணி முதல் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். பங்கேற்பவர்கள் வீட்டிலிருந்து சைவம் (அ) அசைவம் உணவு தயாரித்து எடுத்து வர வேண்டும். அனைவருக்கும் சான்றிதழ், பரிசு வகைகள் வழங்கப்பட உள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
விழுப்புரம் யார்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், தாம்பரத்திலிருந்து விழுப்புரத்துக்கு புறப்படும் பயணிகள் ரயில் (வ.எண்.66045), மறுமார்க்கமாக வ.எண்.66046 ஆகிய இரு ரயில்கள் ஜனவரி 25, 26 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்..
பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், தனி வட்டாட்சியா் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் குறைதீர் முகாம்கள் வரும் ஜன. 25ம் தேதி நடத்தப்படவுள்ளன. குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் உள்ளிட்ட சேவைகளுக்கு மனு வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10:00 மணி அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான 1000க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் ஆண் பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம்.18 வயது முதல் 35 வயது வரையிலான வேலை நாடுனர்கள் கலந்து கொள்ளலாம். SHARE IT
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையினை திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவலுார்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் பராமரிப்பு காரணமாக அவலுார்பேட்டை, வடுகப்பூண்டி, கொடம்பாடி, பரையம்பட்டு, தாழங்குணம், குந்தலம்பட்டு, கப்ளாம்பாடி, கோவில்புரையூர், நொச்சலுார், கோட்டப்பூண்டி, கீக்களூர், மேக்களூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் தடை செய்யப்படும். ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.