India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று (ஆக.10) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அவலூர்பேட்டை ஊராட்சி மன்றம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. சுற்றுப் பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப., உத்தரவின் பேரில் காவலர்கள் போதைப்பொருட்கள் சம்மந்தமாக விழிப்புணர்வு செய்யப்பட்டது.ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திண்டிவனம் அடுத்த மொளசூரில் 5 அடி உயரமுள்ள பலகை கல்லில் செதுக்கப்பட்ட பல்லவர் கால 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பமும், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் சுமார் 3அடி உயரம் உள்ள பலகை கல்லில் அமர்ந்த நிலையில் 9ம் நூற்றாண்டு சேர்ந்த பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்ததேவி சிற்பமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.09) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை (ம) நீர்வளத்துறை சார்பில் இன்று(ஆக.9) ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நீர்வளத்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் கட்டப்பட்டு வரும் அணைகள் குறித்து தகவல் அளிக்கப்பட்டது. மேலும் முதலமைச்சரின் அறிவிப்புகளில் திட்டங்கள் குறித்தும் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கேட்டறிந்தார்.
விழுப்புரம் மாவட்டம் மொரட்டாண்டியில் அமைந்துள்ள பிரத்யங்கிரா தேவி கோயிலின் சிறப்பு தெரியுமா? இங்கு தேவி 72 அடி உயரத்தில் சிங்க முகத்துடனும், மனித உடலுடனும் காட்சியளிக்கிறாள். நரசிம்மரின் கோபத்தை தணிக்க சிவபெருமான் தனது நெற்றிக்கண் மூலம் தேவியை உருவாக்கியதாக புராணம் கூறுகிறது. தேவியின் தலத்தில் வழிபடும் பக்தர்களின் எதிர்மறை சக்திகளான பில்லி, சூனியம் போன்றவை நீங்குவதாக நம்பப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த 3 பேர் போலி பணி நியமன ஆணை வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் நாகர்கோவில் பல்கலைக்கழக கல்லூரிக்கு போலி பணி நியமன ஆணை வழங்கியதாக திண்டிவனத்தை சேர்ந்த செல்வக்குமார்(50), முகமது இஸ்மாயில்(51), பாபு(42) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலி அரசு பணி நியமன ஆணை, அரசாங்க முத்திரைகள், கணினி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நாளை (ஆக.10)க்குள் <
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் ஆக.29ஆம் தேதிக்குள் <
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கல்லாலிப்பட்டு பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவர் தனது ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.95,000 திருடப்பட்டதாக செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வங்கியில் நகையை அடமானம் வைத்து பெற்ற ரூ. 59,000 மற்றும் வீட்டில் இருந்து எடுத்து வந்த ரூ.36,000 என மொத்தம் ரூ.95,000 திருடப்பட்டுள்ளது. செஞ்சி – தி.மலை சாலையில் உணவகத்தில் உணவருந்திய போது சம்பவம் நடந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.