Villupuram

News January 27, 2025

செஞ்சியில் விவசாயிகள் சாலை மறியல்

image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தின் வெளியே விவசாயிகள் கொண்டு வந்த விலைப் பொருட்களை விலை போடாமல் இருந்த கமிட்டி நிர்வாகத்தினை கண்டித்து விவசாயிகள் கிருஷ்ணகிரி – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் செய்து வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News January 27, 2025

பெருமையுடன் விழுப்புரம் வருகிறேன்- முதல்வர்

image

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் எதிர்த்து வெற்றி காண்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை மக்கள் ஆதரவுடன் ரத்து செய்த பெருமையுடன் விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாள் ஆய்வு மேற்கொள்கிறேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

News January 27, 2025

வனத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதையொட்டி விழா மேடையினை வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் அ.சிவா உட்பட பலர் உள்ளனர்.

News January 27, 2025

 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ் உடனிருந்தனர்.

News January 27, 2025

விழுப்புரத்தில் ஜன.30ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் 

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30-ஆம் தேதி காலை நடக்கிறது. கூட்டத்திற்கு ஆட்சியர் சி.பழனி தலைமை தாங்கி விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெறுகிறார். இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்..

News January 27, 2025

தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு நினைவு பரிசு வழங்கல்

image

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியர் சி.பழனி நேற்று தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி மரியாதை செலுத்தினார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட பலர் உடனிருந்தனர். 

News January 27, 2025

விதிகளை மீறி இயங்கிய 64 நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு

image

விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், நேற்று தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட 118 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில், மொத்தம் 64 நிறுவனங்களில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு நிறுவனங்களின் மீது அபராதம் விதித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

News January 27, 2025

விழுப்புரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை

image

விழுப்புரத்திற்கு இன்று வருகை தரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாகிகளின் மணி மண்டபத்தை திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். நாளை அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். விழுப்புரத்திற்கு வருகை தரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டுமென நிர்வாகிகளுக்கு மாவட்ட பொறுப்பாளார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 26, 2025

மீட்பு பணியில் சிறப்பாக பணியாற்றியவருக்கு சான்றிதழ்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அந்த வகையில் கண்டாச்சிபுரம் வட்டம் அரக்கண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கு பெஞ்சல் புயல் மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

News January 26, 2025

குடியரசு தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் சலவைப் பெட்டிகளை மாவட்ட ஆட்சியர் சி.பழனி இன்று (ஜன.26) வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

error: Content is protected !!