Villupuram

News January 28, 2025

ரூ.84 கோடியில் அணைக்கட்டு, ரூ.2 கோடியில் டவுன் ஹால்

image

விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், விழுப்புரம் வட்டத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு வெள்ளத்தால் சேதம் அடைந்த தளவானூர் அணைக்கட்டு 84 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் எனவும், விழுப்புரம் நகராட்சியின் பழம்பெரும் அலுவலக கட்டடம் 2 கோடி ரூபாய் செலவில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் டவுன் ஹால்-ஆக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

News January 28, 2025

போராளிகளின் உறவினர்களுக்கு பொன்னாடை அணிவிப்பு

image

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில், 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ. 5.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, அப்போராளிகளின் உறவினர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

News January 28, 2025

தென்பெண்ணை ஆற்றில் பழங்கால பொருட்கள் கண்டுபிடிப்பு

image

விழுப்புரம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறையை சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர் கோபிநாத், முதுகலை 2-ம் ஆண்டு வரலாற்றுத்துறை மாணவர்கள் ஆகியோர் களஆய்வு மேற்கொண்ட போது, பூமியின் மேற்பரப்பில் சங்ககால சுடுமண் பொம்மை, உறைகிணறு, கெண்டிமூக்கு பானை ஆகியவற்றை கண்டறிந்தனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 28, 2025

சமூக நீதி போராளிகளின் மணிமண்டபம் இன்று திறப்பு

image

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டி பகுதியில் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம், 21 சமூகநீதி போராளிகளுக்கான மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை (ஜன.28) திறந்து வைத்து அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

News January 27, 2025

முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News January 27, 2025

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார் முதல்வர்

image

விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று இரவு 7.15 மணிக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சாலையில் நடந்து சென்று அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். உடன் வனத்துறை அமைச்சர் க. பொன்முடி மற்றும் மாவட்ட செயலாளர் போன் கௌதம சிகாமணி, திமுக கழக நிர்வாகிகள் இருந்தனர்.

News January 27, 2025

முதல்வரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.01.2025) விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை புரிந்ததையொட்டி, விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார். அப்போது அரசு உயர் அதிகாரிகள் பலர் உள்ளனர்.

News January 27, 2025

இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (27.01.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 27, 2025

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூரில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இன்று (ஜனவரி 27) முதலமைச்சர் M. K. ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

News January 27, 2025

திண்டிவனம் வந்தடைந்தார் தமிழக முதல்வர்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திண்டிவனம் பகுதிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சற்றுமுன் வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து இன்று தமிழக முதல்வர் நடந்தே சென்று பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.

error: Content is protected !!