India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் அடுத்த பொய்யாப்பக்கம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்ட 45 வயது உடைய பெண் சுற்றித்திரிந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்தப் பெண் பம்பை ஆற்றில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து விஏஓ அருண்ராஜ் அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜன.30) மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, கெடர் பகுதியில் காணை, அகரம்சித்தாமூர், குப்பம், வாழப்பட்டு, கெடார், கக்கனூர், கொண்டியான்குப்பம், வீரமூ ர் திருக்கை, வைலாமூர், வ.உ.சி. நகா், அய்யூா் அகரம், பனையபுரம், வி.சாலை, அசூா், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு யு.ஜி.சி அறிவித்துள்ள ஊதியம் ரூபாய் 50,000 வழங்கவேண்டியும், ஊதியம் தொடர்பாக நீதிமன்றம் அறிவித்துள்ள உத்தரவை அமல்படுத்த வேண்டியும், அரசாணை 56-ன் படி பணி நிரந்தரம் செய்யவேண்டி வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரத்தில் 1978-இல் கொல்லப்பட்ட 12 தலித்துகளை சமூகநீதிப் போராளிகளாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-க்கு கோரிக்கை விடுத்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் தயாளன். இவர் தனது உறவினர்களுடன் வேனில் திருச்சி சென்று விட்டு நேற்று (ஜன.28) மீண்டும் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். விழுப்புரம் புறவழிச்சாலை அருகே எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த காவல் வாகனம் மீது வேன் மோதியது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரக்காணம் பிடிஓ அலுவலகத்தில் என்ஜீனியராக வேலை பார்த்து வந்த நாகராஜ் நேற்று முன்தினம் தனது பைக்கில் கன்னிகாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த விருத்தாசலத்தை சேர்ந்த தயாநிதி என்பவர் கார் நாகராஜ் பைக் மீது மோதியதில் காயமடைந்த நாகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஷேர் செய்யவும்..
திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயில் இடத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், ரூ.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம், சமையற்கூடம் மற்றும் உணவருந்தும் இடம் ஆகியவை அமைக்கப்படும் என விழுப்புரத்தில் மணி மண்டபங்களை திறந்து வைத்த பின்னர் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
காணை மற்றும் கோலியனூர் ஒன்றியங்களில் உள்ள 29 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 35 கோடி ரூபாய் செலவில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
விழுப்புரத்தில் இன்று காலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர், தென்னமாதேவி, அயனம்பாளையம் கிராமங்களில் பம்பை ஆற்றின் வடகரையில் சங்ககால தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதிகளில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். உடன் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் இருந்தனர்.
விழுப்புரத்தில், இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக அமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நல திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கியும், புதிய அறிவிப்புகளையும் அறிவித்தார். அவற்றில் செஞ்சியில் புதிதாக அரசு தொழிற்பயிற்சி கூடம் ரூ.5 கோடி ரூபாயில் புதிதாக தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு மாணவர்களை மகிழ்ச்சி திளைப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்த்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.