Villupuram

News January 31, 2025

சாலைப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு 

image

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் முழுமையாக சரி செய்யாமல் ஆங்காங்கே குண்டும், குழியுமாக படுமோசமாக இருப்பதாகவும், ஒப்பந்தக்காரர்கள் உடனடியாக சாலை பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சரி செய்து விட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சி. பழனி தெரிவித்துள்ளார்.

News January 31, 2025

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நியமனம்

image

தமிழக அரசு இன்று (ஜன.31) பல மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பழனியை மாற்றம் செய்து, அவருக்கு பதில் ஷேக் அப்துல் ரகுமான் என்பவரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 31, 2025

துணை ராணுவத்தில் டிரைவர் வேலை

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ஷேர் பண்ணுங்க

News January 31, 2025

சாலை விபத்தில் அங்கன்வாடி ஊழியா் பலி 

image

திண்டிவனம் வட்டம், அகூர் புது காலனியை சேர்ந்த மாணிக்கம் மனைவி பூங்காவனம் (57) மேல்பேரடிகுப்பத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக வேலைப் பாா்த்து வந்தாா். இவா் சிறுநாங்கூா் ராயர் தெருவைச் சேர்ந்த பிரசாந்த்திடம் (23) உதவி கேட்டு, அவருடன் பைக்கில் தீவனூருக்கு சென்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த பூங்காவனம் சம்ப இடத்திலே உயிரிழந்தார். ரெட்டணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 31, 2025

ரூ.1.60 கோடியை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க திட்டம்

image

விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே ₹1.60 கோடி பணத்துடன் திருச்சியைச் சேர்ந்த முகமது ரியாஸ், சிராஜிதியூன், சித்திக், ராஜ் முகமது ஆகிய 4 பேர் நேற்று பிடிபட்டனர். சென்னை பிராட்வேயில் பணத்தைப் பெற்று கொண்டு செல்லும் வழியில் அவர்கள் சிக்கியுள்ளனர்.யாருக்கு பணம் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்த விசாரணை நடந்து வரும் நிலையில் பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

News January 31, 2025

மனநலம் பாதித்த பெண் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

image

விழுப்புரம் அருகிலுள்ள செங்காடு பகுதியில் சேர்ந்தவர் செல்வமரி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் (ஜன 30) நேற்று செங்காடு கல்லறைத் தோட்ட குளத்துக்குச் சென்ற செல்வமரிக்கு திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த வளவனூா் போலீசார்  நிகழ்விடம் விரைந்து சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 31, 2025

திருவெண்ணெய்நல்லூர் 22ஆம் ஆண்டு ஊஞ்சல் உற்சவம்

image

திருவெண்ணெய்நல்லூர்அருள்மிகு மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் ஆலய 22ஆம் ஆண்டு ஊஞ்சல் உற்சவம் இன்று (ஜன.31) நடக்கிறது நடக்கிறது. காலை 10.00 மணியளவில் ஸ்ரீ மங்களாம்பிகை அம்மனுக்கு அபிஷேகமும், மாலை 7.00 மணியளவில் உற்சவ அம்மனுக்கு தீபாராதனை செய்து (அம்மன் கோயிலை) மூன்று முறை வலம் வந்து, திருஊஞ்சலில் வைத்து ஊஞ்சல் உற்சவம் மண்டப தீபாராதனையுடன் மிகச்சிறப்பாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 31, 2025

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த திமுக பொறுப்பாளர்

image

முரசொலி நாளிதழில் இன்று ஜனவரி.30 வெளிவந்த முதலமைச்சரின் உங்களில் ஒருவன் கடிதத்தில், விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனத்தில் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்ட ஏற்பாடுகள் மற்றும் வரவேற்பினை சிறப்பாக செய்தமைக்காக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சேகரை குறிப்பிட்டு பாராட்டியிருந்தார். இதனை முன்னிட்டு, திமுக பொறுப்பாளர் சேகர் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

News January 31, 2025

விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (ஜன.30) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News January 30, 2025

நெல், எள் பயிா்களுக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி

image

விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல் எள் பயிா்களுக்கு காப்பீடு செய்ய வெள்ளிக்கிழமை (ஜன.31) கடைசி நாள் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது. விவசாயிகள் தங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள பொது சேவை மையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீட்டுத்தொகை செலுத்தி பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!