India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மக்களே வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்த நீங்கள் இனி எங்கும் போக வேண்டாம்! ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள சொத்து வரி, நிலுவைத் தொகை என அனைத்தையும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் செலுத்தவும், செலுத்திய விவரங்களை பார்க்கவும் முடியும். இங்கு <

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம், விற்பட்டு த.வெ.க கிளைச் செயலாளர் அய்யப்பன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூரில் நடந்த த.வெ.க கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலுக்கு மு.அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்து விட்டு அவர் இந்த தற்கொலை செய்துகொண்டார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(செப்.29) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம், விற்பட்டு த.வெ.க கிளை செயலாளர் அய்யப்பன், கரூரில் நடந்த தமிழக வெற்றி கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார். அன்றைய தினம் திறந்திருக்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

விழுப்புரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

தாம்பரம் – செங்கோட்டை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் நாளை (செப்.30) மாலை 4.15 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் விழுப்புரம், செங்கல்பட்டு, விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாகச் செங்கோட்டையை அடையும். இந்தச் சிறப்பு ரயிலைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை, அதிமுக மாநிலங்கவை உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளருமான சி.வி சண்முகம் இன்று (செப்-29) நேரில் சந்தித்தார். ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ராமதாசை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் 1 வருட தொழிற்பயிற்சிக்கு விண்ணபிக்கலாம். 2021 முதல் 2025 ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறைகளில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் <

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.