India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டிவனம் காவல் உதவி ஆய்வாளர் சுதன் தலைமையிலான போலீசார் (பிப் 02) நேற்று திண்டிவனம் ரயில் நிலையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 5 பேரிடம் சோதனை செய்தபோது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 3.6 கிலோ கஞ்சா, 4 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் தென்மேற்கு மாவட்ட செயலாளராக வடிவேல் என்பவரை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்செயல் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
விழுப்புரம் தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளராக மோகன் அவர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு விழுப்புரம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தங்கம் சேமிப்பு திட்டம், கார் நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் சுமார் 30 நபர்களிடம் இருந்து 80 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த சங்கராபுரம் மைக்கேல் புரத்தைச் சேர்ந்த ஜான் கென்னடி என்பவரை விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட கென்னடி தமிழ்நாடு வைப்பிட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் பக்தர்கள் தங்கும் ஷீட் கொட்டகையில் நேற்று முன்தினம் 45 வயது நபர் இறந்து கிடந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து வி.ஏ.ஓ., கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், மேல்மலையனுார் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருவெண்ணைநல்லூர் கடைவீதியில் மாதுரம் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறக்க வந்த போது, முன்பக்க ஷட்டரின் பூட்டுகள் உடைந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை கைப்பற்றி, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் சி.பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பு விழுப்புரம் மாவட்டத்தில் நிலம் தொடர்பான கோரிக்கை மனுக்களை, வரும் பிப்.7-ஆம் நடைபெறவுள்ள சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்து பயன்பெறலாம். இக்கூட்டத்தில் பட்டா மாற்றம், நில ஒப்படை, இலவச வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு தொடர்பான மனுக்களைப் பொதுமக்கள் நேரிடையாக அளித்து பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், கோட்டகுப்பம், விக்கிரவாண்டி, திண்டிவனம் உள்ளிட்ட உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (01.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளை அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வானூர்(தனி) தொகுதி, தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளராக G.P. சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட கழக இணை செயலாளராக P.ராஜி, பொருளாளர் P.பிரவீன் ராஜ், துணைச் செயலாளராக M.K. வேந்தன், B.கங்கம்மாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மேலும் செயற்குழு உறுப்பினர்கள் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“தலைசிறந்த காந்தியவாதியும் விடுதலை பெற்ற இந்தியாவில் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சருமான ஓமந்தூரார் அவர்களின் பிறந்தநாள் இன்று! குறுகிய காலத்தில் அவர் படைத்த சாதனைகள் ஏராளம். பொதுவாழ்வில் நேர்மை, உழவர்கள் மீது பெரும் அக்கறை என வாழ்ந்த அவருக்கு என் புகழஞ்சலிகள்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.