Villupuram

News November 14, 2024

விழுப்புரத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர், கண்டமங்கலம், கஞ்சனூர், மதுரபாக்கம் ஆகிய துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (நவ.14) மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பை ஏற்று, பொதுமக்கள் வீட்டுப் பணிகளை முன்கூட்டியே முடித்துவிடுங்கள். போன் மற்றும் லைட்டுகளில் சார்ஜ் போட்டு வைத்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News November 13, 2024

எஸ்பி தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்

image

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகார்களை, குறைகளை மனுவாக எழுதி அவரிடம் அளித்தனர். இந்த நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News November 13, 2024

மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஒத்திவைப்பு

image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், சி.மெய்யூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 14.11.2024 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிருவாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 13, 2024

விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

தமிழகத்தில் இன்று (13-11-2024) 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News November 13, 2024

நிதிச் செயலாளரோடு விழுப்புரம் எம்பி சந்திப்பு

image

தமிழ்நாடு அரசின் நிதிச் செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக நேற்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் சந்தித்தார். அப்போது வன்னி அரசு உடனிருந்தார். விழுப்புரத்தில் புதிய தொழிற்சாலைகள் துவக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். போதுமான நிலத்தை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து தெரிவித்தால் தொழிற்சாலை துவக்க உடனே நடவடிக்கை எடுக்கலாம் என நிதித்துறை செயலாளர் தெரிவித்தார்.

News November 13, 2024

திமுக ஆட்சியில் பாதுகாப்பு கிடையாது- அன்புமணி

image

திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். டாக்டர் மீதான தாக்குதல் குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உழவர்களுக்கு அடுத்தபடியாக உயிர்காக்கும் கடவுள்களாக மதிக்கப்படுவது டாக்டர்கள் தான் என்றார். மேலும், மருத்துவம் அளிப்பதில் பாகுபாடு காட்டப்படுவதில்லை எனவும், டாக்டர்கள் மீதான தாக்குதலை அரசு வேடிக்கை பார்க்க கூடாது என தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

விழுப்புரம் மாவட்டத்தின் மழையளவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விழுப்புரம் 38 மில்லி மீட்டர், கோலியனூர் 40 மில்லி மீட்டர், வளவனூர் 45 மில்லி மீட்டர், நேமூர் 17 மில்லி மீட்டர், வானூர் 20 மில்லி மீட்டர், திண்டிவனம் 4 மில்லி மீட்டர், மரக்காணம் 38 மில்லி மீட்டர், செஞ்சி 2 மில்லி மீட்டர், அனந்தபுரம் 11 மில்லி மீட்டர், திருவெண்ணைநல்லூர் 19 மில்லி மீட்டர், அரசூர் 15 மில்லி மீட்டர். சராசரி மழை அளவு 12.90 மில்லி மீட்டர்.

News November 13, 2024

விழுப்புரம் அருகே ஒன்பது கடைகளுக்கு சீல்

image

விழுப்புரம் மாவட்ட போலீஸார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய சோதனையில் விழுப்புரம், ஜானகிபுரம், கோலியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 9 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கடை உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவின்படி, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் நடவடிக்கை எடுத்தனர்.

News November 13, 2024

விழுப்புரத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

image

தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவன ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள், சட்ட திட்டங்கள் குறித்த பயிற்சி வரும் 21 – 23ஆம் தேதி வரை மாவட்ட தொழில் மையத்தில் நடக்கிறது. இந்த பயிற்சி பற்றிய கூடுதல் விபரங்களுக்கு www.editn.in என்ற இணையதள முகவரி மற்றும் மொபைல் 9080130299, 9080609808 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 13, 2024

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

image

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ. சக்கரபாணி மீது தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையில், விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அதிமுக வழக்கறிஞர்கள் ஆஜராகி, இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக கூறினர். இதையடுத்து வழக்கு வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.