India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் பிப்.28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏப்.11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000- ரூ.1,60,000 வரை வழங்கப்படும். <
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (04.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் நகர விசிக பொருளாளர் முகமது ஷெரிப்(48), நேற்று முன்தினம் இரவு பைக்கில் வந்தபோது முன் விரோதம் காரணமாக பாலா என்கிற பாலகணேஷ் (19), சுதாகர் (31), ரஞ்சித் (24) விஷ்ணு (19), விஷ்வா (22) ஆகியோர் கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகினர். இவர்கள் 5 பேரையும் இன்று கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விசுவநாதன் தலைமையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு (02.02.2025) முன் உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண்ணை பாரம்பரிய முறைப்படி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இச்செய்தியை கேள்வியுற்ற தமிழக வனத்துறை அமைச்சர் கே.பொன்முடி அவர்கள் இந்த இளஞ்ஜோடிகளை இன்று(பிப்.04) நேரில் சென்று வாழ்த்தினார். இதுபோன்ற சமத்துவ திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிய கலெக்டராக ஷேக் அப்துல் ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது மனைவி பத்மஜா மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் இருவரும் பொறுப்பேற்க உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கணவர் கலெக்டராகவும், மனைவி கடலூர் மாநகராட்சி ஆணையராகவும் ஏற்கனவே பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு மாடவீதியில் வசித்து வந்த நமச்சிவாயம் என்பவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் துறையினரால் இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நமச்சிவாயம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மறு ஆய்வு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 7ஆம் தேதி முதல் துவங்கி 17ஆம் தேதி வரை தினசரி விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியை சேர்ந்த இளைஞர் உதயக்குமார் முதுகலை பொறியல் படித்துவிட்டு உக்ரைன் நாட்டில் வேலை செய்து வந்தார். அப்போது உக்ரைன் நாட்டு பட்டதாரி பெண் அனஸ் டாசியா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டு இருவீட்டார் சம்மதத்துடன் இந்து முறைப்படி இன்று காலை விழுப்புரத்தில் திருமணம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பழனி, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கூடுதல் ஆணையராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை இன்று எல்ஜி அறக்கட்டளை செந்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது ஆட்சியர அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மரக்காணம் வட்டத்திற்குட்பட்ட வசவன்குப்பம் முதல் எக்கியர்குப்பம் வரை இன்று காலை கடலோர காவல் படையினர் கடற்கரை ஓரம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஆலிவ் ரிட்லி எனப்படும் அரியவகை ஆமைகள் 18 இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பதை கண்டறிந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஆமைகள் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.