India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (07.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து, அதனை ஈடு செய்யும் வகையில் நாளை 08.02.2025 (சனிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஆணையிட்டுள்ளார். புதன்கிழமை கால அட்டவணைபடி பள்ளிகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியை சூறையாடி பொருட்களை எடுத்துச் சென்றதாக 53 சிறார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்காக 45 சிறார்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் விசாரணை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றிய 18 சப் இன்ஸ்பெக்டர்கள் நிர்வாக காரணங்களால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 18 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தோகைப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தமிழக முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டுப் பார்த்து அதன் தரம் குறித்து ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று ஆய்வு செய்தார். அங்கு இருந்த ஊழியர்களிடம் தரமான முறையில் உணவை தயாரித்து மாணவர்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தினார்.
சென்னையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் கணேஷ் திண்டிவனம் சே.புதூர்(24) பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கூலிவேலை செய்து வந்தார். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் அதே பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை வீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரிய தச்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (06.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்களிக்கவும், வழக்கிலிருந்து விடுவிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து வசதி அற்ற மக்களுக்கு, போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக, மினி பஸ்களை இயக்க தமிழக அரசால் திட்டமிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மினி பஸ் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள பேருந்து உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்டத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் தங்களது ஊதியத்தை உயர்த்த வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசு கல்லூரி கௌரவ பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.