India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசினர் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஆட்சியர் பழனி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் வருகைப் பதிவேடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு கேட்டறிந்தார். தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்க உத்தரவிட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை நடத்தப்பட்ட சாராய ரெய்டுகளில் 8290 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 8362 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களிடமிருந்து 12 நான்கு சக்கர வாகனங்களும்,3 மூன்று சக்கர வாகனங்களும், 46 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2232 லிட்டர் கள்ள சாராயமும் 79,727 புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சகுந்தலா (60) என்ற மூதாட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரிடமிருந்து தங்க நகைகள் பறிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மூதாட்டியை கொலை செய்த வழக்கில் ஜெயந்த் என்பவரை போலீசார் நேற்று (மே 28) கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே 7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிவராமன் (88) என்ற முதியோர் மீது திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று (மே 28) போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் CCTV மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை ஆட்சியர் பழனி இன்று நேரில் பார்வையிட்டு காவலர்களுக்கான வருகை பதிவேட்டினை ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மருதூர் சுடுகாட்டுப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் பம்ப் ஹவுஸ் அமைப்பதற்கான பணியினை நகராட்சி நிர்வாகம் செய்ய தொடங்கியது. அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும் என கூறி ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது. நாளை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் தலைமையில் செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். ஆலோசனைக் கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான ரக்பி போட்டியில் பங்கேற்றனர். மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் நடைபெற்ற போட்டிகளில், இப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, வெற்றி பெற்றனர். சாதனை படைத்த மாணவர்கள் குழுவினர், விழுப்புரத்தில் ஆட்சியில் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பழனியை நேற்று (மே 27) சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மொரட்டாண்டி டோல்கேட் அருகே காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் மற்றும் காவலர் அப்துல்ரஷீத் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை அடுத்து விழுப்புரம் எஸ்பி நேற்று (மே 27 ) இரண்டு காவலர்களையும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

அரசூர் துணைமின் நிலையத்துக்குட்பட்ட இருந்தை கிராமத்தில் உள்ள மின்மாற்றியில் நடைபெறும் பராமரிப்பு பணியின் காரணமாக அரசூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், மாமண்டூர், பழைய பட்டினம், கிராமம், பொய்கை அரசூர், ஆணைவாரி ஆகிய கிராமப் பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் மின்சாரம் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.