India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (அக்.03) இரவு முதல் இன்று காலை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மக்களே, கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 Apprentices Training பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 394 பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. அடிப்படை சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <

தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்தின் படி ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி போன்ற அரசு விடுமுறை தினங்களில் ஒவ்வொரு நிறுவனமும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். விடுமுறை தினத்தில் வேலை செய்தால் அதற்கு ஈடாக மாற்று தின விடுப்பு (அ) இரட்டிப்பு சம்பளம் தர வேண்டும். இவை தரவில்லை என்றாலோ (அ) சம்பளத்துடன் விடுப்பு தரவில்லை என்றாலோ மாவட்ட தொழிலாளர் நலவாரியத்தில் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

திண்டிவனத்தில் வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 5ம் தேதி காலை 6 மணியளவில் சீனியர், ஜூனியர் இரு பிரிவுகளில் மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது. சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். சீனியர் பிரிவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் ,ஜூனியர் பிரிவு 10-15 வயதிற்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதவி தேவைப்படுவோர் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் நலன் பாதுகாப்பு சிறப்பு சேவை துறை அலுவலகத்திற்கு தொலைபேசி எண் 04146 299659 மற்றும் அவசர உதவிக்கு 1098 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. குழந்தைகள் பரிதவிப்பு குறித்து அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். (SHARE பண்ணுங்க)

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் LKG- 8ம் வகுப்பு வரை இலவச கல்வி பெறும் RTE திட்டத்திற்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், RTE திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கல்வி கட்டணம் செலுத்தி இருந்தால் 7 நாட்களுக்குள் அதை திருப்பி அளிக்க வேண்டும். திருப்பி அளிக்கவில்லை என்றால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் (அ) 14417 தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்.

திண்டிவனம் வட்டத்தில், காலியாக உள்ள 11 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தமிழில் எழுத படிக்க தெரிந்த 1.7.25 அன்று 21 வயது நிரம்பிய 32 வயதிற்குஉட்பட்டவர்கள் இந்த லிங்கில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து 15.10.25க்குள் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

மத்திய உள்துறையின் கீழ் உள்ள டில்லி போலீசில் 7565 காலிப்பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18-25 வயதுக்குட்பட்டவர்கள் <

விழுப்புரம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி கள்ளச்சந்தையில் மது விற்ற 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 584 மது பாட்டில்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 17 குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.