India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம், வீடூரில் உள்ள வராக நதி & தொண்டியாறு பகுதி கம்மாளமேட்டில், விவேகானந்தா கல்லுாரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் மாயகிருஷ்ணன், திண்டிவனம் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் ஹரிஹரசுதன் ஆகியோர் நேற்று (அக்.03) கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய கல் கோடாரி போன்ற கருவிகள் கண்டறியப்பட்டது. இது தொல்லியல் துறையில் ஒப்படைக்கப்பட்டது.

1.அனந்தபுரம் வரதராஜ பெருமாள் கோயில் 2.கச்சிராயப்பாளையம் வரதராஜ பெருமாள் கோயில் 3.பூவரங்குப்பம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் 4.விழுப்புரம் திருக்கோவிலூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில் 5.கரிவரத பெருமாள் கோயில் (கோட்டை பூண்டி) 6.கோலியனூர் வரதராஜப்பெருமாள் கோயில் 6.சேதுவராயநல்லூர் சீனுவாசப்பெருமாள் கோயில் 7.சொரப்பூர் லட்சுமிநாராயணபெருமாள் கோயில் *மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க*

விழுப்புரம் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் கடை திறந்திருக்கும் விவரம் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும், உங்கள் பகுதி ரேஷன் கடையில் உள்ள ஸ்டாக் பற்றி தெரிந்துகொள்ள PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!

திண்டிவனம் அருகே உள்ள சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் மார்க்கண்டன். இவர் நேற்று முன்தினம் தீவனூர் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொல்லார் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் & ராமராஜ் ஆகியோர்கள் மார்கண்டனிடம் லிப்ட் தரும்படி கேட்டனர். மார்க்கண்டன் மறுத்தபோது, கையில் வைத்திருந்த கத்தியால் அவரை கீறினர். இதுகுறித்து ரோஷனை போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் TN Rights திட்டத்தில் 9 பதவிகளுக்கு மொத்தம் 1,096 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்சமாக 10ம் முதல் ஏதேனும் ஒரு டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.12,000 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 14ம் தேதி வரை இந்த <

மணம்பூண்டி அடுத்த திருக்கோவிலூர், கபிலர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (அக்.04) ‘நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்’ நடைபெற உள்ளது. இந்த முகாமில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கௌதமசிகாமணி மற்றும் மு.அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்று துவக்கி வைக்க உள்ளனர். இதில் அனைத்து வகையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுவதால் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) தொழிற்பயிற்சிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1,588 இடங்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், CS, IT ஆகியவற்றில் BE (அ) டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். உதவித்தொகையாக மாதம் ரூ.9,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையும் தெரிவித்துள்ளது. இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.4) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்டில் சொல்லுங்க!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் வழியாக 54 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வருகின்ற அக்.20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் அக்.18 முதல் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் சேவை அக்.17ம் தேதி முதல் இயக்கப்படும் எனவும், பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (அக்.03) இரவு முதல் இன்று காலை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.