India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டில் புதிதாக கல்வெட்டு அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆகஸ்ட் 20 புதன்கிழமை திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார் உடன் நகர மன்ற உறுப்பினர்கள் ஆர் ஆர் எஸ் ரவிச்சந்திரன் புனிதா ராஜேந்திரன் ரம்யா ராஜா ஆகியோர் உடன் இருந்தனர் இருந்தனர்
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 – ரூ.1,69,025 சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
இத்திட்டத்தின் மூலம் 60% சிறுபான்மையினர் மற்றும் 40% இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோர் பயனடையலாம்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க
▶️ வருமானச் சான்றிதழ்
▶️ சாதிச் சான்றிதழ்
▶️ பள்ளி மாற்றுச் சான்றிதழ்
▶️ இருப்பிடச் சான்றிதழ்
▶️ குடும்ப அட்டை
▶️ ஆதார் அட்டை
▶️ பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க..
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் தொழில் தொடங்க சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரையும், தனிநபர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், கூட்டுறவு வங்கி உள்ளிட்ட இடங்களில் இதற்கான விண்ணப்பங்களை பெறலாம். ஷேர் பண்ணுங்க. <<17460158>>தொடர்ச்சி<<>>..
விழுப்புரம் மாவட்டத்திற்கு தமிழக அரசின் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.70 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பயனாளிகளுக்கு, 2 கோடி கடன் 7 ஆண்டுகள் 3% வட்டி மானியம் மற்றும் அரசின் கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இதற்கு விவசாய தொழில் முனைவோர், சுய உதவி குழுக்கள், விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கமிட்டிகள் மூலம், கடந்த 4 மாதங்களில் ரூ.260 கோடி மதிப்பில், 84 ஆயிரம் டன் விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மொத்தம் 9 மார்க்கெட் கமிட்டிகளில் 1,01,212 விவசாயிகள், விளைபொருட்களை விற்பனை செய்துள்ளனர். மொத்தம் 84,747.46 டன் வேளாண் விளைபொருட்கள், ரூ.260.59 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ – மாணவிகள் நேற்று (ஆக.19) மயிலாடுதுறையில் 300 பேர் பங்கேற்ற மாநில அளவிலான 8 – 16 வயதானோருக்கான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றிப்பெற்றனர். மாணவ – மாணவியரின் வெற்றியை எம்.எல்.ஏ லட்சுமணன் அழைத்து பாரட்டு தெரிவித்தார்.
பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <
திண்டிவனம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஆக.21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திண்டிவனம் நகரம், சென்னை சாலை, மயிலம் ரோடு, ஜெயபுரம், செஞ்சி சாலை, கிளியனூர், உப்பு வேலூர், சலவாதி, சாரம், இறையனூர், எண்டியூர், ஜக்கம் பேட்டை, தெண்பசார், கீழ் சித்தாமூர், அன்னம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு 10:00 மணி முதல் இன்று (ஆக.20) நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.