Villupuram

News February 14, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (13.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 13, 2025

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் நியமனம்

image

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி மற்றும் வானூர் சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக டாக்டர் லட்சுமணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News February 13, 2025

திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளராக செஞ்சி மஸ்தான் நியமனம்

image

விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராகவும் அமைச்சராகவும் பதவி வகித்து வந்த செஞ்சி மஸ்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

News February 13, 2025

அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு

image

தமிழக அமைச்சரவையில் இன்று மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சராக இருக்கும் க. பொன்முடி அவர்கள் ஏற்கனவே உயர்கல்வி அமைச்சராக இருந்து மாற்றப்பட்டு வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்று பதிவி வகித்து வருகிறார். தற்போது அவருக்கு கூடுதல் பொறுப்பாக காதி மற்றும் கிராம தொழில் துறை வழங்கப்பட்டுள்ளது.

News February 13, 2025

விழுப்புரம் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

image

விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. செஞ்சி, மயிலம், திண்டிவனம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக எம்.எல்.ஏ மஸ்தான், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கௌதம சிகாமணி மற்றும் விழுப்புரம், வானூர் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளராக எம்.எல்.ஏ ஆர்.லட்சுமணன்.

News February 13, 2025

8ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு

image

செஞ்சியை சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகி சரவணன் காதல் தொல்லை அளித்து வந்துள்ளார். கடந்த பிப்.,11 அன்று மாணவியை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சரவணன் வற்புறுத்தி உள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். செஞ்சி போலீசார் பெண் குழந்தைக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்

News February 13, 2025

கட்டுமான பணியில் ஈடுப்பட்ட தொழிலாளி மயங்கி விழுந்து பலி 

image

கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியார்சாவடியில் மாரியம்மன் கோவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. அங்கு புதுவை மணவெளியை சேர்ந்த தேவநாதன் நேற்று டைல்ஸ் போடும் பணி செய்து கொண்டிருந்த பொழுது மயக்கமடைந்தார். உடனே அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவரது மனைவி காந்திமதி கொடுத்த புகாரில் கோட்டக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 13, 2025

லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

image

கிளியனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கேணிப்பட்டு கூட்டு சாலை அருகே நேற்று அதிகாலை சாலையோரத்தில் லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த லாரியின் பின்பகுதியில் புதுச்சேரி நோக்கிச் சென்ற சரக்கு லாரி மோதியது. இந்த விபத்தில் சரக்கு லாரி டிரைவர் மோகன் குமார் படுகாயம் அடைந்தார். அவருடன் அமர்ந்திருந்த மோதிஸ்வர் உயிரிழந்தார். இது குறித்து கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 13, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (12.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!