India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெஞ்சால் புயல் காரணமாக விடுமுறை விடப்பட்ட நாட்களை ஈடுசெய்யும் விதமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 15.02.2025 சனிக்கிழமை அன்று பணி நாளாகும். எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் வியாழக்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்து வகை தலைமை ஆசியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் வழுதரெட்டிப் பகுதியில் பல்லவர் காலத்து முருகன் சிற்பம் கண்டறியப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் உத்தரவின்பேரில் இன்று கடலூர் அருங்காட்சியகம் காப்பாட்சியர் ஜெயவர்த்தனா வருகை தந்து முருகன் சிற்பத்தை நேரில் பார்வையிட்டு அறிக்கை விரைவில் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.
விழுப்புரம் தெற்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 17ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சமூக நல்லிணக்க சமத்துவ விருந்து மாவட்டத் தலைவர் கா.அஸ்கர் அலி தலைமையில் சமத்துவ விருந்தினை பொதுச் செயலாளர் அப்துல் சமது MLA துவக்கி வைத்து பொதுமக்களோடு அமர்ந்து உணவு அருந்தினார்.
விழுப்புரம் எம்பி ரவிக்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில், சாதிவெறி என்னும் நச்சுப்பாம்பு மதவாதம் என்னும் புற்றில்தான் வாழ்கிறது. திராவிட மாடல் அரசு மதவாதப் புற்றை உடைத்தால் மட்டும் போதாது, சாதி வெறி நச்சுப் பாம்புகளைப் பிடித்து அவற்றின் விஷப் பல்லைப் பிடுங்க வேண்டும். இல்லாவிட்டால் இன்று ஆதிதிராவிட மக்களைக் கடிக்கும் பாம்புகள் நாளை ஆட்சியாளர்களையும் கடிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (14.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மேல்மலையனூர் ஒன்றியத்தில் அங்காளம்மன் ஆலயத்தில் மாசி மாத மகம் தேர் திருவிழாவை முன்னிட்டு தேர் செய்யும் பணி மிக விரைவாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் கோவில் சாமியார்கள் மற்றும் பூசாரிகள் முக்கிய நிர்வாகிகள் தேர் செய்யும் பணியை பார்வையிட்டு வருகின்றனர். தேர் செய்யும் பணி முடிந்தவுடன் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரிக்கு தேர் திருவிழா மிக விரைவில் அறிவிக்கப்படும்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே திருமணம் செய்யக்கோரி மிரட்டியதால் 13 வயது பள்ளிச் சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சிறுமியின் உறவினர்கள் செஞ்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நரசிங்கராயன் பேட்டையைச் சேர்ந்த சரவணன் (25) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். த.வெ.க.வைச் சேர்ந்த சரவணன் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேல்மலையனூர் கூடுவாம்பூண்டியைச் சேர்ந்த மூதாட்டி லட்சுமிகாந்திஅதே கிராமத்தைச் சேர்ந்த வளர்மதிக்கு ரூ.2 லட்சம் கடன் கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் வளர்மதி வீட்டிற்கு சென்று பணத்தை கேட்ட போது ஏற்பட்ட தகராறில் லட்சுமிகாந்தி தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். வளத்தி காவல் நிலையத்திற்கு சென்ற வளர்மதி நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். இதையடுத்த போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் சிறுவந்தாடு பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள், சரவணன் செந்தில் இருவரும் நேற்று முன்தினம் திருவெண்ணைநல்லூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். வழியில் தனியார் மண்டபம் அருகே செந்தில் சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.