India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று (ஏப்ரல் 5) இரவு சேலம் நோக்கிச் சென்ற மினி லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. திண்டிவனம் பகுதியில் இருந்து சேலத்திற்கு கிர்ணி பழங்களை ஏற்றிக்கொண்டு விக்கிரவாண்டி அருகே சென்றபோது ஓட்டுநர் சதீஷ் (31) கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் சிறிது நேரம் அச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதி, ஒலக்கூர் ஒன்றியம், வடம்பூண்டி ஊராட்சியில் திமுக கூட்டணி சார்பில் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தரணிவேந்தனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு நேற்று (ஏப்ரல் 5) தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் வாக்கு சேகரித்தார். உடன் ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

இன்று சேலத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து 28 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது விழுப்புரம் புறவழிச்சாலையில் ஏற முற்பட்டது.அவ்வழியாக கண்டெய்னர் லாரி ஒன்று அதிவேகத்தில் வந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி அரசு பேருந்தின் மீது மோதியது,இதில் அரசு பேருந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.இதில் அரசு பேருந்து ஓட்டுனருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வார இறுதி நாள்களில் வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளதால், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக கூடுதலாக 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என நேற்று (ஏப்.4) தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், ஆரணி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மயிலம் சட்டமன்றத் தொகுதி இரும்புலி கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அ.கணேஷ் குமார் இன்று (ஏப்ரல் 4) பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். உடன் பா.ம.க வடக்கு மாவட்ட செயலாளர் சி.சிவக்குமார் வாக்கு சேகரித்தார். இதில் அப்பகுதி மக்கள் மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் பா.ம.க வேட்பாளரை வரவேற்றனர்.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர்
ஜெ. பாக்யராஜ்-க்கு விழுப்புரம் நகரம் 41வது வார்டு கழக செயலாளர் M.R. கிருஷ்ணன் தலைமையில் இன்று
( ஏப்ரல் 4 ) வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரித்தனர். உடன் அதிமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் நேற்று (ஏப்.3) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சிறு தொழில் செய்ய முடியவில்லை. எல்லாம் கார்ப்பரேட் மயமாகிவிட்டன. அவர்கள் செய்த தேச துரோகங்களில் தேர்தல் நிதி பத்திர மோசடியும் ஒன்று என பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(36). மருத்துவரான இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 1ஆம் தேதி ஜிம்முக்கு செல்வதற்காக ஈசிஆர் சாலையில் நடந்து சென்ற இவரிடம் பணத்தைப் பறித்து தப்பி ஓடிய கல்லூரி மாணவர்கள் நசீர்பாஷா, சாம்பசிவம், கீர்த்தி வாசன் ஆகிய மூன்று பேரை கோட்டக்குப்பம் போலீசார் இன்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.