Villupuram

News April 8, 2024

விழுப்புரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு

image

விழுப்புரம் மாவட்டம் தெளி கிராமத்தில் அடிக்கடி மின்னழுத்த பற்றாக்குறை ஏற்படுகிறது. அதுபோக மாலை 4 மணிக்கு துண்டிக்கப்படும் மின்சாரம் இரவு 9 மணிக்குதான் வருகிறது. அடிக்கடி இதுபோல நடப்பதால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு படிக்கின்ற மாணவர்கள் மிகவும் பாதிப்பை சந்திக்கின்றனர். குழந்தைகளும், பெரியவர்களும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

News April 7, 2024

முழு அரசு மரியாதையுடன் தகனம்

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி நேற்று காலமானார். இதைத்தொடர்ந்து அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று அவரது சொந்த ஊரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும் இறுதிச் சடங்கு முடியும் வரை அமைச்சர் க.பொன்முடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் R.இலட்சுமணன், மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

News April 7, 2024

விழுப்புரம் வி.சி.க வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கல்லூரி சாலை பாரதிதாசன் நகர் ஏஜி சபையில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வி.சி.க வேட்பாளர் துரை. ரவிக்குமாருக்கு வழக்கறிஞர் M.D. பாபு தலைமையில் பானை சின்னத்திற்கு இன்று ( ஏப்ரல் 7) வாக்கு சேகரித்தனர். உடன் திண்டிவனம் நகர செயலாளர் மு.செ.எழிலரசன் ,திமுக நிர்வாகிகள் மற்றும் வி.சி.க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>-1 <<>>என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>https://affidavit.eci.gov.in/ <<>>என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 7, 2024

எம்எல்ஏ உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்

image

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, கலைஞர் அறிவாலயத்தில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரும் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளருமான நா. புகழேந்தி மறைவை தொடர்ந்து நேற்று அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்தினார்.

News April 6, 2024

படிப்படியாக உயர்ந்து வந்த புகழேந்தி

image

விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி இன்று (ஏப்ரல் 6) உடல்நிலை குறைவால் காலமானார். 1955ஆம் ஆண்டு பிறந்த புகழேந்தி அத்தியூர் திருவாதித்தினை கிராமத்தைச் சேர்ந்தவர். உளுந்தூர்பேட்டை அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை கற்றுள்ளார். திமுக கிளைக் கழகச் செயலாளராகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும், ஒன்றிய சேர்மன் ஆகவும் பின்னர் ஒன்றிய செயலாளராகவும் படிப்படியாக வளர்ந்தது குறிப்பிடத்தக்கது.

News April 6, 2024

விழுப்புரம்: பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, விழுப்புரம் தொகுதியில் 76 – 14, ஆரணி தொகுதியில் 108 – 3 ஆகியவை பதற்றமான – மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

BIG BREAKING விழுப்புரம்: எம்எல்ஏ காலமானார்!

image

விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி இன்று (ஏப்.6) காலமானார். சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த அவர் நேற்று விக்கிரவாண்டியில் ஸ்டாலின் வருகையையொட்டி ஏற்பாடுகளை கண்காணிக்க வந்த நிலையில் மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதனை அடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி சற்றுமுன் இறந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

News April 6, 2024

விழுப்புரம்: எம்எல்ஏ கவலைக்கிடம்

image

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து மருத்துவக்குழு முண்டியம்பாக்கம் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், விழுப்புரம் மக்களவை தொகுதி வேட்பாளர் ரவிக்குமார் இன்றைய தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். பொன்முடி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்து வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!