India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களின் நீண்ட கால கோரிக்கையான தொல்லியல் ஆராய்ச்சி மையம் மற்றும் அருங்காட்சியகம் கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு அரசாணை அறிவித்த பிறகும் தற்போது வரை அதற்கான எந்த முன்னெடுப்புகளும் எடுக்காமல் உள்ளது. அதை விரைவுபடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து விரைவாக கட்டிடம் கட்டிக் தரப்படும் என விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் பாமக வேட்பாளர் முரளி சங்கர் என வாக்குறுதி அளித்துள்ளார்.

விழுப்புரம் மக்களவைத் (தனி) தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பா. ம. க. , வேட்பாளர் முரளிசங்கர், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வி. சாத்தனுார், பொன்னங்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, கொங்கராம்பூண்டி, வி. சாலை, டி. புதுப்பாளையம், தென்பேர், சின்னத்தச்சூர், எசாலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஓட்டு சேகரித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் ஒன்றிய பகுதியில் இன்று (ஏப்ரல் 17) கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர். மயிலம் ஒன்றியத்திற்குட்பட்ட கணபதி பட்டு கிராமத்தில் மயிலம் மத்திய ஒன்றிய செயலாளர் செழியன் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி உட்பட ஏராளமான திமுகவினர் பொதுமக்களிடம் ஆரணி தொகுதி வேட்பாளர் தரணி வேந்தனுக்காக வாக்கு சேகரித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம், வசந்தகிருஷ்ணாபுரம் பகுதியில் அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று (ஏப்ரல் 16) ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த கிராமத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் (40) என்ற நபரை கைது செய்து, அவரிடமிருந்து 154 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த பேராவூர் பகுதியைச் சேர்ந்த முருகன் (53) என்பவர் அவரது வீட்டில் புதுச்சேரி சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததாக கிளியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அங்கு சென்ற கிளியனூர் போலீசார் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 லிட்டர் புதுச்சேரி சாராயத்தை பறிமுதல் செய்தனர். முருகனை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் சாராயத்தை கலால் துறையில் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கூட்டு பாதையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இன்று (ஏப்ரல் 15) பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணியின் சார்பாக விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவிக்குமார் ஆதரவாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பானை சின்னத்திற்கு வாக்களிக்க பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். மோடியை வீட்டுக்கு அனுப்புவது நமது தலையாய கடமை என கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த அவலூர்பேட்டையில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் நேற்று (ஏப்ரல் 14) சஷ்டி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பால், தயிர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. சஷ்டி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மக்களவை (தனி) தொகுதிக்குட்பட்ட வானூர் சட்டசபை தொகுதியில் கடப்பேரிக்குப்பம், எறையூர், பூத்துறை, குயிலாப்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பதற்றமான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கோட்டக்குப்பம் டி. எஸ். பி சுனில் மேற்பார்வையில், துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் விழுப்புரம் மைய மாவட்டத்தின் சார்பில் இன்று(ஏப்ரல் 14) புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன. மைய மாவட்ட செயலாளர் திண்டிவனம் திலீபன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான கட்சியினரும், பொதுமக்களும், இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. எஸ்.பி சமய்சிங் மீனா உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது போலீசார் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.