Villupuram

News February 21, 2025

அனைத்து பள்ளிகளிலும் இன்று உறுதிமொழி

image

பிப்ரவரி 22 உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் ஆணைக்கிணங்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும், வட்டார கல்வி அலுவலகங்களிலும், கல்வி அலுவலகங்களிலும் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

News February 21, 2025

கர்நாடகத்திலிருந்து 210 கிலோ குட்கா பொருட்கள் கடத்தல்

image

விழுப்புரத்தில் சிறப்பு காவல் படையினர், பெங்களூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று டாட்டா ஏசி வேனை சோதனை செய்தனர். அப்போது, அந்த வேனில் கர்நாடகாவிலிருந்து கடத்திவரப்பட்ட 210 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

News February 21, 2025

விழுப்புரத்தில் 29 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்

image

விழுப்புரம் மாவட்டத்தில் 29 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படுகின்றன. இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஒவ்வொரு மருந்தகத்திலும் உள்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர்சாதனப் பெட்டி, குளிரூட்டி இயந்திரம், மருந்துகளை வைப்பதற்கான பெட்டிகளைத் தயார் செய்தல் போன்ற பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிப்.24ஆம் தேதி இந்த மருந்தகங்களை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

News February 21, 2025

புத்தகத் திருவிழா மார்ச் 2ஆம் தேதி துவங்குகிறது

image

வரும் 02-03-2025 முதல் 12-03-2025 வரை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சித் திடலில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. புத்தக கண்காட்சியையொட்டி பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கான பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. தினந்தோறும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழிவுகள் மற்றும் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

News February 20, 2025

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் வழக்கு முடித்து வைப்பு

image

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சிப்போர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கோயிலில், இரு தரப்பினரையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க உத்தரவிட்டு இந்த வழக்கானது முடித்து வைக்கப்பட்டுள்ளது.

News February 20, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (20.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 20, 2025

திருக்கோவிலூரை தனி மாவட்டமாக அறிவிக்க கவனயீர்ப்பு போராட்டம்

image

திருக்கோவிலூரை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி திருக்கோவிலூர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. தனி மாவட்டமாக அறிவிக்க கோரி அனைத்து கட்சி சார்பாகவும், வழக்கறிஞர்கள் சார்பாகவும், தன்னார்வ சார்பாகவும் பொதுமக்கள் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்து சென்றனர்.

News February 20, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரமற்ற குடிநீர்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குடிக்கும் நீர் சுகாதாரமற்ற முறையில், புழுக்கள் மேய்ந்த நிலையில் கிடப்பதால் குடிக்க நீரின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே இந்த நிலை என்றால் மற்ற அரசு அலுவலகங்களில் எந்த நிலை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News February 19, 2025

விழுப்புரத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞருக்கு விருது

image

சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு தமிழக அரசால் வாழும் கைவினை பொக்கிஷம் என்ற விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2023-24 ஆம் ஆண்டிற்கான இந்த விருதை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுடுகளிமண் சிற்பக் கலைஞர் பலராமன் உள்ளிட்ட 9 பேருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். விருது பெரும் கலைஞர்களுக்கு 8 லட்சம் காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம், தாமிரப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

News February 19, 2025

இறைச்சிக் கடையில் குழந்தைத் தொழிலாளி மீட்பு

image

மரக்காணம் அருகிலுள்ள கந்தாடு கிராமத்தில் கோழி இறைச்சிக் கடையில் குழந்தைத் தொழிலாளர் பணியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த கடையிலிருந்து குழந்தைத் தொழிலாளர் மீட்கப்பட்டு மாவட்டக் குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டார். சட்டமுறை எடையளவுச் சட்டத்தின் கீழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 61 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

error: Content is protected !!